அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் செயற்குழு

ATLAS

அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் மெல்பனில் எப்பிங் மெமோரியல் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் நடைபெற்றது.
உலகெங்கும் போரில் உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்றதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டுப்பொதுக்கூட்ட குறிப்புகளை செயலாளர் திரு. கே.எஸ். சுதாகரன் சமர்ப்பித்தார். குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2012- 2013 ஆம் ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கையும் நிதியறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் காப்பாளர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தயாரித்து சங்க உறுப்பினர்களின் கவனத்திற்குட்பட்ட புதிய அமைப்புவிதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து 2013- 2014 ஆம் ஆண்டிற்கான செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.

தலைவர்;: டொக்டர் என். எஸ். நடேசன்
துணைத்தலைவர்: திரு. நவரத்தினம் அல்லமதேவன்
செயலாளர்: திரு. லெ. முருகபூபதி
துணைச்செயலாளர்: திரு. சண்முகம் சந்திரன்
நிதிச்செயலாளர்: கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை
துணை நிதிச்செயலாளர்: திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி
இதழாசிரியர்: திரு. கே.எஸ். சுதாகரன்
செயற்குழு: திருமதி அருண். விஜயராணி திரு. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா
திரு. செல்வபாண்டியன் திரு. ஆனந்தகுமார் திரு. ஸ்ரீநந்தகுமார்
திருமதி மாலதி முருகபூபதி திரு. க. தயாளன்
காப்பாளர்: திரு. கலைவளன் சிசு நாகேந்திரன்.

பாடும்மீன் ஸ்ரீகந்தராசவின் மணிவிழாவை முன்னிட்டு உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். அவர் கேக்வெட்டி உறுப்பினர்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். அவரது துணைவியார் திருமதி கோமளா ஸ்ரீகந்தராசாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.