கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவிரர் நாள் அனுஷ்டிக்கப்படும் வேளையில் தமிழக வணிக இதழ் ஆனந்தவிகடனில் திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு விடயம் பதிவாகியிருந்தது. ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்போராளி தற்பொழுது விபசாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றவேண்டிய சூழலுக்கு ஆளாகியிருப்பதாக அந்த புனைவு கதைபண்ணியிருந்தது.
கதை படைப்பதுவேறு கதைபண்ணுவது வேறு.
ஆனந்தவிகடனின் வணிகநோக்குடனான அந்தப்புனைவில் உண்மை ஏதும் இல்லை என்று நிருவாகம் அறிந்ததும் அதனை எழுதியவர் அங்கிருந்து நிருவாகத்தினால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அங்கு நீண்ட காலம் பணியிலிருந்த கேலிச்சித்திரக்காரரும் ஹாய் மதன் கேள்வி பகுதியை தொடர்ந்து கவனித்தவரும் ஏற்கனவே ஒரு காரணத்தினால் தாமாகவே அங்கிருந்து வெளியேறினார். வெறும் பரபரப்புக்காக வர்த்தகநோக்குடன் வெளியாகும் தமிழக இதழ்கள் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாம் விரிவாகப்பார்க்கலாம்.
பின்னூட்டமொன்றை இடுக