விடுதலைப்புலிகள் யாவருக்கும் மன்னிப்பு ?

விடுதலைப்புலிகளை சேர்ந்தவர்கள் யாவரையும் ஒட்டு மொத்தமாக மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து பலரிடம் உளளது. இங்கே எனது கருத்து மன்னிப்பது மன்னிக்காதது அல்லது பழி வாங்குவதோ இல்லையோ என்பது சம்பந்தமான பிரச்சனை இல்லை. வெளியே வருபவர்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும் என்பது தான். இதற்கு தயாராக எல்லோரும் இருக்கிறார்களா எனபதே?

புலிகளால் எனக்கு தெரிந்த 500 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். பொட்டு அம்மானையும் பிரபாகரனையும் தவிர்ந்த சகலரையும மன்னிக்கும் நிலையில் உள்ளேன் . மேற்காணும் இவர்கள் இருவரும் மனவியாதி கொண்டவர்கள் என்ற கருத்து இருபது வருடங்களாக இருந்தது. இதை நிருபிக்க பல ஆதாரங்கள் என்னிடம் உளளது,

இதில் உள்ள பெரிய அதிசம் இவர்கள் பின் இந்த சமூகம் பின் தொடர்ந்து போனதே.

சிறுவர்கள் இளைஞர் என புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள் பலரை சந்தித்து இருக்கிறேன் . இதே வேளையில் சந்தர்பத்தால் வேறு வழி இல்லாமல் சேர்ந்தவர்கள், இவர்களை விட புலிகளோடு சமூக நன்நோக்கத்தில் சேர்ந்து இயங்கிவர்கள் ஏராளமானவர்கள். தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பி வாழ்பவர்கள் வாழநினைப்வர்கள் எனப் பல வகை கருணா மற்றும் கேபி போன்றவர்கள் இந்த தரப்பில் சேர்க்க வேண்டியுள்ளது. அவர்கள் கூட தாங்கள் நிரபராதிகள் என்று சொல்லவில்லை .

வெளிநாட்டில் தப்பி வந்து விடுதலைப்புலிகள்,  சக தமிழர்கள் , சக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேல் வன்முறையாக நடந்து கொளளும் சிலர் உண்டு. இப்படியானவர்கள் சிட்னி மெல்பெனில்கூட இருக்கிறார்கள்

இதே சமயம் தற்கொலைப் போராளிகள் கூட பலர் மன்னிக்கப்ட்டு வெளியே வந்திருக்கிறார். இப்படியான விடயங்கள் படிபடியாகதான் நடை பெறவேண்டும்.

புலி இயக்கத்தில் சேர்நது அந்த இயக்கத்த்தின் பேரில் சமூக விரோத செயல்களை செய்தவர்கள் பலர் மனத்தில் விகாரமாக்கப்பட்டு மாற முடியாத நிiலையில் உள்ளார்கள். உதாரணமாக சித்திவதை செய்தவர்கள் தற்கொலைப் போராளிகளை வழி நடத்தியவர்கள் மற்றும் சில கரும்புலிகள் இவர்கள் மனங்களை மாறுவதற்கு பலநாள் எடுக்கும். அதுவரையும் .இவர்களை வெளியே விடுவது எமது சமுதாயத்துக்குதான் ஆபத்து..

இலங்கைஇராணுவத்தினர் செய்தது குற்றங்கள் தனி மனிதர் குற்றங்களல்ல. .நாட்டில் உள்ள அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் எடுத்தவர்களுக்கு எதிரான வன்முறை. நாட்டுக்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் ஜனதா விமுக்தி பெரமுனைக்கு எதிராக செய்தார்கள். இதற்காக ஜனதா விமுக்தி பெரமுனையினர் நல்லவர்கள் என்பது கருத்தல்ல.

அரச படைகள் வன்முறைக்காக உருவாக்கப்பட்டவை. காலம் காலமாக எல்லா அரசாங்கமும் செய்து வருகிறது. இந்திய, அமரிக்க ,பிரித்தானிய என எல்லா இராணுவத்தினரும் செய்து வந்தார்கள். அந்த இராணுவததில் சில மனநோயாளிகள் இருப்பார்கள். எல்லா நாடுகளிலும இராணுவத்தில் சைகோலஜிட் இருப்பார்கள் இராணுவத்தின் குற்றங்கள் இராணுவத்துள் தீர்க்கவேண்டும். இது காலம் காலமான நடைமுறை.

மன்னிப்பை பற்றி பேசும்போது பாதிக்கப்பட்டவர் பேசுவதற்கும் சகல உரிமையும் உள்ளது. மணியம் போன்றவர்கள் சித்திரவதையை அனுபவித்த அப்பாவிகள் .அவர்கள் பேசினாலத்தான் எதிகாலத்தில் இப்படியான அநியாயங்கள் வராது தடுக்கலாம்

அமெரிக்க அரசாங்கம் அறுபதுகளில் கியுபா சிறைகளை திறக்க சொன்னபோது பிடல்காஸ்ரோ முழு சிறையை திறந்து அவர்களை அமரிக்கா செல்ல அனுமதித்தார்.ஏராளமான கொலைக்காரர் திருடர்கள் பெண்களை வன்முறை செய்தவர்கள் மியாமிக்கு வந்து சேர்நதது சரித்திரம். இதற்கப்பால் விடுதலைப்புலிகளும் தங்களை சேர்நதவர்கள் பலர் சமூக விரோதிகள் என உள்ளே வைத்தனர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.