
நடேசன்
அவுஸ்திரேலியாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் கடந்த எண்பது வருடத்தில் 620 சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்ப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கை தயாரித்திக்கிறார்கள். இது அவர்களது புள்ளிவிபரம். இவர்கள் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பணம் கொடுத்து விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டவையும் இதில் அடங்கும் என நினைக்க விரும்புகிறேன்.
அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி பத்திற்கு ஒன்று மடடுமே பாதிககப்பட்டவர்களால் வெளி சொல்லப்படுகிறது. இப்படி பார்த்தால் ஆறாயிரத்துக்கு மேற்பட்வர்கள் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு உடபடுத்தப்பட்டிப்பார்கள்.
இதைவிட விக்டேரியபொலிஸ் அறிக்கை ஒன்று தயாரித்து பாராளமன்றத்திற்கு கொடுக்கவிருக்கிறார்கள். இதன் பிரகாரம் நாடு தழுவிய ரோயல் கமிசன் வைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது..
அவுஸ்திரேலியாவில் மட்டும் கத்தோலிக்க திருசபையினர் இப்படி செய்துவிட்டார்கள்? மற்ற நாடுகளில் இவை நடக்காமல் இருக்குமா?
அமரிக்காவில் பலர் தொடர்சியாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களுக்கு இழுக்கப்படுகிறார்கள் .
இந்த நிலையில் இலங்கை இந்திய போன்ற நாடுகளில் உள்ள கததோலிக்கசபைக்கு எதிராக குற்றம் சாட்டப்படவில்லை என்பதால் இவர்கள் எந்த விடயங்களில் ஈடுபடாதவர்கள் என்பது அர்த்தமா?
எனக்குத் தெரிந்த வரை பலர் இலங்கை செமினறிகளில் இருந்து இடையில் வெளியேறியுள்ளார்கள். ஆனால் எமது நாட்டில் யாராவது பாதிரி ஒருவர் மேல் குற்றம் சாட்டமுடியுமா?
எமது நாடுகளில் ஆண் சிறுவர்களில் குற்றமிழைக்குப்படும் போது சமுகம் பொருட்படுத்தப்படுவதில்லை .கற்பு என்பது ஆணுக்கு தேவையில்லை அத்துடன் ஆணில் பாலியல் வன்முறையால் உடல்ரீதியான மாறறம் ஏற்படாது என்ற கருத்தாக்கமே இதற்கு அடிப்படைக்காரணம். மனரீதியான பாதிப்பை கீழத்தேய சமுகம் காலம் காலமாக புறக்கணிப்பது வரலாறு.
கத்தோலிக்க திருச்சபையினர் திருமணமாகதவர்கள்தான் பாதிரியாக வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கும்வரை இப்படியான விடயங்கள் நடைபெறும். இயற்கைக்கு மாறான இந்த துறவறம் பலருக்கு ஒரு போர்வை போன்றது. போர்வைக்குள் காலம் காலமாக தனிமனிதக் குறைகள் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது.
பின்னூட்டமொன்றை இடுக