அசோகனின் வைத்தியசாலை:நாவலில் ஒரு பந்தி.

தற்கொலை செய்து உயிரைவிட நினைப்பவர்கள் பலருக்கு சில கணமேனும் சிந்திக்கவைக்கும்

இறப்புக்கு முன்பாக அதை உணர்ந்து கொள்ளும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மிருகங்களால் பறவைகளால் அதை உணர்ந்து கொள்ள முடியாது. காட்டில் மேயும் மானால் அம்புடன் காத்திருக்கும் வேடனை நினைத்துப் பார்க்க முடிவதில்லை. நீரில் மிதக்கும் மீனால் அருகில் தொங்கும் தூண்டலினால் மரணம் வருவதை உணரமுடியாது. அதே போல் வளர்ப்பு மிருகங்களையும் கருணைக் கொலை செய்வதற்கு மிருக வைத்தியரிடம் கொண்டு வரும் போது அவைகளுக்கு தங்களுக்கு வரவிருக்கும் மரணத்தை புரிந்து கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் மரணத்தை புரிந்து கொண்டு அச்சமடைவதுடன் அதை தடுக்க நினைப்பார்கள்.

மரணத்தை நினைத்து மனிதன் அதை புரிந்து கொள்ள முயல்வதே மனித வரலாற்றில் சமயங்களின் தோற்றததிற்கு காரணாகிறது. ஆங்காங்கு தோன்றிய ஞானிகள் இறப்பை புறக்கணிக்க முயற்சித்து உபதேசித்த போதும் ஒரு சிலர் மட்டும் இறப்பை மட்டுமல்லாது மனித வாழ்கையையும் அதன் உறவுகளையும் அதனால் ஏற்படும் உணர்வுகளையும் புறக்கணிக்கிறார்கள்.

இறப்புக்கு பயப்படாமல் இருந்தால் மனிதகுலம் டைனோசர்கள் போல் அழிந்து விட்டிருக்கும். இதனால்த்தான் சாதாரண மனிதன் இறப்பை புறக்கணிக்க முடியாமல் அதை வாழ்வின் முக்கிய சடங்காகாக்கிறான். உலகத்தின் சகல பிரதேசத்தில் வாழும் மக்கள் இறப்பை பிரபலபடுத்தி அதை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக முக்கியத்துவப்படுத்துகிறார்கள் . இதனை எண்ணும் போது இறப்பை உதாசினப்படுத்த எண்ணியவர்கள் ஆரம்பத்திலே தோற்கடிக்கப்பட்டதையே கவாச்சாரங்களின் வரலாறு சொல்கிறது.

காயமே ஆது பொய்யடடா காற்றடைத்த பையடா என இருநூறு வருடத்தின் முன்பு சித்தர்களும்,  இறப்பு இல்லா வீடே இல்லை என மகனது உயிரைக் காப்பாற்ற தன்னைத்தேடி வந்த பெண்ணைப்பார்த்து புத்தர் கூறினாலும் பண்டைய எகிப்தியர்களில் இருந்து இன்று வாழும் மக்கள்வரை உடல் நிலையாது என தெரிந்து கொண்டாலும் புறக்கணிக்க முடியவில்லை.https://noelnadesan.com/wp-content/uploads/2023/04/pdf-asokanin-vaithiyasail.pdf

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.