கல்வி நிதிய 23 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்

இலங்கை மாணவர் கல்வி நிதியம்

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 23 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம் எதிர்வரும் 30-09-2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும்.

தயவுசெய்து குறிப்பிட்ட நாளையும் காலத்தையும் மறக்காமல், ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் உறுப்பினர் ஒன்றுகூடல் தேநீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறும் கல்வி நிதியம் அழைக்கின்றது.

ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெறும் முகவரி:

Darebin Intercultural Centre

59 A Roseberry Avenue,

Preston, Victoria 3072

அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக இயங்கியவாறு இலங்கையில் நடந்த போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு இயன்றவரையில் உதவிவரும் எமது மாணவர் கல்வி நிதியத்திற்கு மேலும் பல உதவிகோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆண்டுப்பொதுக்கூட்டம் தகவல் அமர்வாகவும் இடம்பெறுவதனால் உறுப்பினர்களின் வரவையும் மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்களின் வருகையையும் எதிர்பார்க்கின்றோம். தங்கள் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இத்தகவலைத்தெரிவிக்கவும்.

தங்கள் வருகையை 15-09-2012 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவித்து தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ளுமாறும் நிதியம் கேட்டுக்கொள்கின்றது.

அன்புடன்

எஸ்.கொர்னேலியஸ்  மதிவதினி சந்திரானந்த் வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா

( செயலாளர்)                     (தலைவர்)                                              (நிதிச்செயலாளர்)

(03) 9308 5510            0425 72 88 39   (03) 9708 1218                       0404 80 82 50

தகவல்:    லெ.முருகபூபதி (03) 9308 1484, 0416 62 57 66

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.