1851 ல் தங்கம் கிடைத்ததால் விக்டோரியாவுக்கு பிரித்தானியாவில் இருந்து மட்டுமல்ல ஐரோப்பா சீனாவில் இருந்து குடியேற்றவாசிகள் வந்து குடியேறினார்கள் இதனால் விக்டோரியா நியூ சவுத் வேல்சுக்கு போட்டியாக வளர்ந்தது மட்டுமல்ல மெல்பன் என்ற இரண்டாவது நகரம் உருவாக காரணமாக இருந்து. இதில் தங்கம் கிடைத்த இடங்கள் பலரட் (Ballarat) ,பெண்டிகோ (Bendigo ). அவைக்கு சுற்றி உள்ள பகுதிகள் எங்கும் தங்கம் தோண்டப்பட்டது. மெல்பன்னில் 150 கிலோமீட்டர் தூரத்தில் டால்ஸ்போட் என்ற நகரம் தங்கம் தோண்டப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் உள்ளது. இந்த பிரதேசங்களில் நிலத்துகடி தண்ணீரில் பல கனிமங்களோடு வருவதால் உடல் நலத்துக்கு நல்லது என்று ஏராளமானவர்கள் செல்கிறார்கள்.
கெப்பேன் பிரிங் குளிப்பதற்கும் உடம்பை மசாஜ் செய்வதற்கும் பெருமளவு உல்லாசபிரயாணிகள் பல இடங்களில் இருந்து வருகிறார்கள்
கேப்பேன் நகரின் மத்தியில் பல சதுர மைல்கள் தங்கம் தோண்டிய இடங்கள் இப்பொழுது மீண்டும் காடாக வளர்கப்பட்டு tracking செய்வதற்கு ஏற்ற வன பிரதேசமாக்கி இருக்கிறார்கள். நிலத்தை கிண்டி கனிமங்களை எடுததுவிட்டு மீண்டும் அந்த பிரதேசங்களை வனமாக்கி பாவிப்ப நல்லது மட்டுமல்ல அதை உல்லாசப்பிரயாணிகளை கவர்வதற்காக ஈகோ ரூரிசமாக்கும் ( ECO-TOURISM) செயல்ப்பாடாகும்
டாலஸ்போட் அழகான வாவிகளையும் பூங்காவையை கொண்ட நகரமாகும். இந்த பிரதேசத்தில் மிக அருமையான திராச்சைகள் விளைவதால் அங்கு பெறப்படும் ரெட் வைன் எவ்வளவும் குடிக்கலாம். ஆனால் என்ன மது மயக்கத்தை எம்மையறியாமல் கூட்டிவிடும்
வராவிடுமுறையை செலவிடுவதற்கு சிறந்த இடம்.
சிவப்பு வைன், மசாஜ், கண்ணுக்கு அழகான காட்சி, பக்கத்தில் மனைவி – எல்லோருக்கு ஒமர் கயம் ஆகலாம்
பின்னூட்டமொன்றை இடுக