நடேசன்
சமிபத்தில் எனது சிங்கள நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது
‘நடேசன், எனது நண்பியின் மகன் மொனாசில்(Monash University) இரட்டை டீகிரி செய்தவர். யாழ்ப்பாணத்தில் ஒரு வருடம் படிப்பிக்க போகிறான் பெற்றோர்கள் பயப்பிடுகிறார்கள். அவர்களை சந்திக்க முடியுமா?’ என கேட்டாள்.
சந்தோசத்துடன அவர்களையும் அந்த இளைஞனையும் எனது கிளினிக்கு வரவளைத்து ‘யாழ்பாணத்தில எந்த பிரச்னையும் உங்கள் வராது மேலும் சென் ஜோன் பாடசாலையில் படிப்பிக்க போவது மிகவும் நல்லது. யாழ்பாணத்தில் முதன்மையான கல்லுரி. அந்த இடம் யாழ்பாணத்தின் கறுவாக்காடு. அத்துடன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அரசாங்க அதிபரின் காரியாலம் பக்கத்தில் இருக்கிறது. அவர்களது தொடர்புகளை ஒழுங்கு செய்யலாம் என பெற்றோருக்கு சொல்லி விட்டு மெல்பேனில் எனது நண்பரும் சென் ஜோன் கல்லுரியின் பழய மாணவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாச்சத்துடன் பேசி அவரது தொடர்பையும் கொடுத்தேன். அந்த இளைஞனின் சேவை மனத்தை மனமார பாராட்டினே;.
இந்தமாதம் 9ம் திகதி போக இருந்த இருந்தவர்கள் மீண்டும் என்னை பெற்றோர்கள் தொடர்பு கொண்டார்கள். நான் எனது நண்பரும் சிவில் பொறியலாளராக இலண்டனில் நாப்பது வருடங்கள் கடமையாற்றிய சூரியசேகரம் தற்போது இரண்டு வருடங்களாக யாழ்பாணத்தில் சேவை செய்து வருகிறார். அவரிடம் பேசி இந்த இளைஞனை நீங்கள் பார்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். மேலும் சூரியசேகரத்தின் தொலைபேசியை அந்தப் பெற்றோரிடம் கொடுத்த போது, இப்போதுதான் எங்களுக்கு நிம்மதி என அந்த பெற்றோர எனக்கு சொன்னார்கள்.
இது ஒரு சிறிய விடமாக இருந்தாலும் தனது இலணடன் வாழ்வையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்த யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும் சூரியசேகரமும் இந்த இருபத்து மூன்று வயது சிங்கள இளைஞனும் எனது ஹீரோக்கள். இவர்களது செயல்கள்தான் மனிதம் இன்னும் வாழ்கிறது மேலும் அது இனம் மதம் மொழிக்கு அப்பாற்பட்டது என நினைக்க வைக்கிறது
குப்பைமேட்டில் கொக்கரிக்கும் சேவல்கள் போல் இருக்கும் வெளிநாட்டு தமிழர்களுக்கு இப்படி சத்தம் இடாமல் பல முட்டைகள இடும் கோழிகள் உள்ளது என்பதற்காக இந்த குறிப்பைத்தருகிறேன்
பின்னூட்டமொன்றை இடுக