வில்சன் புரோம், விக்ரோரியா

அவுஸ்திரேலிய பெருநில பரப்பின் மேற்கே இருக்கும் தென் கடல் ஒரு அபாரமான திறமை உள்ள சிற்பியை போன்றது. மேற்கு கரையில் கற் குன்றுகளை செதுக்கி அதன் மேல் மரங்களையும மற்றும் செடிகளையும் வைத்து சிறு அளவில் வெண்மணல் பரப்பி அழகாக லாண்ட் ஸ்கேப் செய்துள்ளது. விக்ரோரியாவின் மேற்கே நோக்கி செல்லும் கிறேற் ஓசன் ரோட்டில(Great Ocean Road) போனால் இந்த காட்சி பல மைல் தூரத்திற்கு அழகாக விரிந்து கண்களை கவர்ந்து செல்லும். இந்த மாதம் (26-12-2011) மெல்போனில் தென்கிழக்கே 225 கிலோ மீட்ரில இருக்கும் வில்சன் புரோம்மொனிரறி தேசிய பூங்காவுக்கு சென்ற போது அதற்கு நிகரான இயற்கையின் கைவண்ணத்தை காண முடிந்தது.

இரண்டரை மணித்தியாலம்   காரில் சென்றால் கிட்டததட்ட 25 கிலோமீட்டருக்கு இந்த பூங்கா உள்ளது. கடந்த வைகாசியில வெள்ளத்தால் இந்த பூங்கா பல அழிவை சந்தித்தது. இதற்கு முன்பு 2005 தீயால் எரிந்தது இன்னும்  வடுக்களாக தெரிகிறது.
அவுஸ்திரேலிய அதிவாசிகளின் முன்னோர்களின் நம்பிக்கைகளை கனவுகளையும் தாங்கிய பிரதேசமாக இருப்பதால் இந்த இடம் பாதுகாக்கப்பட்டுகிறது இதே வேளையில் சுற்று சூழுலை பாதுகாத்துக் கொண்டு சுற்றாலா இடமாக ( Tidal River) பகுதி மட்டும் காம்பிங் , கடற்கரை (Surfing)சேர்விங் செய்வதற்கு பாவிக்கபடுகிறது. நடப்பதற்கும் ,மலை ஏறுவதற்கும் ஒழுங்குகள் வசதியானது. கடற்கரை பகுதி மாலையின் சூரியன் மறையும் நேரத்தில் அழகானது. மீண்டும் போக நினைத்திருக்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.