பின் தொடரும் அரசியல் சூனியம்

நடேசன்

அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்களில் சிலர் எதிர்வரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் கீறின்( சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள கட்சி) கட்சிக்கு தங்கள் வாக்குகளைப் போடவேண்டும் என தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்கள் மேலும் ஈழத்தமிழர் வம்சாவளியை சேர்நத் இலங்கைப் பெண் ஒருவரும் அதிக தமிழர்கள் வாழும் நியு சுவுத் வேல்ஸ் மானிலத்தில். இந்த தேர்தலில் மேற்சபையான செனட்டுக்கு நிற்கிறார.; இந்த கிறீன் கட்சிக்காக ஈடுபடும் தமிழர்கள் ஒரு வருடத்தின் முன் விடுதலைப்புலிகளை அவுஸ்திரேலியா அங்கீகரிக்க வேண்டும் எனத் தெருத்தெருவாக கோசம் இட்டவர்கள். இவர்களின் கோசத்தை ஆளும் தொழில்கட்சியோ அல்லது மூன்று வருடத்துக்கு முன்பு இருந்த லிபரல் கட்சியோ கணக்கெடுக்கவில்;லை இதே வேளையில் கிறீன்கட்சி அத்தைக்கு மீசை முளைத்தது மாதிரி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கூட பயங்கரவாத இயக்கத்தையும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க தமிழ்த்தேசியவாதம் போல் சிங்கள தேசிய வாதிகள் அவுஸ்திரேலியாவில் அதிக அளவில் உள்ளார்கள். அவர்கள் இப்பொழுது சிங்கள மக்களை கிறீன் கட்சிக்கு போடவேண்டாமென்று ஈமெயில் பிரசாரம் செய்கிறார்கள். இதைப்பார்ததுவிட்டு தமிழர்கள் இயற்கையை பற்றி கவலைப்படுகிறார்கள் சிங்களவர்கள் இயற்கையின் அழிவை விரும்புகிறவர்கள் என கருதிவிடாதீர்கள்.

இலங்கைத்தமிழர்கள் சுற்று சூழலைக்கருத்தில் கொண்டோ இல்லை அணு ஆயுதத்துக்கு எதிராகவோ அல்லது புவி வெப்பமாவதை நினைத்து கிறீன் கட்சிக்கு ஆதரவழித்திருந்தால் எம் தமிழரை நினைத்து பெருமைப்பட்டு இருப்பேன்.

நான் பதினைந்து வருடங்களாக ஆவுஸ்திரேலிய தொழில்கட்சியில் அங்கத்தினராக இருப்பவன். தொழிற்கட்சி கடந்த மூன்று வருடத்தில் பாரிய அளவில் சூழல் வெப்பமாதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பல விடயங்களை செய்தது. இவற்றில் முக்கியமானது வீடுகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரத்தை எடுப்பதற்கான திட்டத்தை வைத்து அதில் பெரும் பகுதியை அரசாங்கம் மானியமாக அளித்தார்கள்.. இந்த திட்டத்தின் பிரகாரம் ஏராளமான மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். வீடுகளுக்கு இன்சுலேசன் இலவசமாக அளித்தார்கள். இதன்மூலம் வீடுகளை குளிராக்க அல்லது சூடாக்க பாவிக்கும் மின்சாரம் மிச்சப்படுத்தலம். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் மிக சொற்பமானவை என்றாலும் லிபரல் கட்சியின் கொள்கைகளோடு ஒப்பிடும் போது சிறந்தவை. மேலும் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி பெரிய திட்டங்களில் ஈடுபடமுடியாமல் வைத்து விட்டது. முக்கியமாக நிலக்கரியில் இருந்து மின்சாரம் பெறும்போதே அதிக மாசு ஏற்படுகிறது. ஏராளமான நிலக்கரி ஏற்றுமதி செய்யம் நாடு அவுஸ்திரேலியா.

தொழிற் கட்சி ஆரம்பத்தில் செய்வதாக சொன்ன விடயங்களில் ஈடுபடாதது எனக்கும் ஏமாற்றம்தான். இந்தக்காரணங்களால் எமது தமிழர்கள் கிறீன் கட்சிக்கு பிரசாரம் செய்யவிரும்பினால் அது எனக்கு சந்தோசமாக இருக்கம். ஆனால் இவர்கள் செய்வுது குளத்தோடு கோவித்துக் கொண்டு தங்கள் …………கழுவாதது போன்ற விடயமாகும்.

அவுஸ்திரேலியாவில் 15000 இலங்கைத் தமிழ் வாக்காளர்கள் இருப்பார்கள். இது ஒரு சிறிய அளவு. இவர்கள் தமிழர்கள் எல்லாரும் கிறீன் கட்சிக்கு என சொல்லி மற்றைய இருகட்சிகளிலும் இருந்து தழிழர்களை அன்னியப்படுத்துகிறார்கள். மேலும் லிபரல் கட்சியோ இல்லை தொழிற்கட்சிதான் ஆட்சிக்கு வரும். அரசியல்வாதிகள் வாக்களித்தவர்களையே கவனிக்காதவர்கள். அதிலும் எதிர்த்து வாக்களித்தவர்களை பற்றி என்ன நினைப்பார்கள்?. ஈழத்தமிர்களான எங்களுக்கு பல விடயங்களில் அரசாங்கத்துடன் பேசு வேண்டி இருக்கிறது. இதில் முக்கியமானது இந்த அகதிகள் விடயம. 4000 மேற்பட்ட ஈழ அகதிகள். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் உள்ளார்கள். பெரும்பாலான தமிழர்கள் தொழிற்கட்சி ஆட்சியில் 83 ஆண்டுக்கு பின் வந்தவர்கள். அதன் பின் வந்த லிபரல் ஆட்சியில் வந்த தமிழர்கள் மிக சொற்பம். இப்படி இருக்கும் போது தாங்கள் கடந்து வந்த பாலத்தை எரிக்கும் வல்லமை நம்மைத் தவிர யாருக்கு வரும்?

கிறீன் கட்சிக்கு போட வேண்டாம் என நான் சொல்லவில்லை. வாக்களியுங்கள். ஆனால் பந்தாகாட்டி எல்லா தமிழருக்காகவும் என அறிக்கை விட்டு பரபரப்பு காட்டவேண்டாம். எம்மைபோன்ற சிறிய சமூகம் எல்லாக் கட்சிகளிலும் அங்கத்துவமாக இருக்கவேண்டும். ஒரு கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது. வேலுப்பிள்ளை பிரபாகரனில இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர் தொகையில் சிங்களமக்களும் பறங்கியர்களும் 70 வீதத்திற்கு மேல் உள்ளார்கள். சிலரின் முட்டாள்தனமான செயல்களால் உண்மையில் கிறீன் கட்சி நிட்சயமாக பல வாக்குகளை ஏற்கனவே இழந்திருக்கும்;

‘முட்டாள் கிணத்துக்குள் தூக்கி போட்ட கல்லை பல புத்திசாலிகளாலும் திரும்பி எடுக்க முடியாது’ என்பது இலங்தை தமிழ் அரசியலில் மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் எங்கு இருந்தாலும் பொருந்தும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.