குறிச்சொல்: நடேசன்
-
சீட்டும் மீட்டர்வட்டியும் புலம் பெயர்ந்து விட்டது
சிறு வயதில் நயினாதீவில் படிக்கும் போது அப்புவின் உடன் பிறந்த சகோதரிகளான இரு மாமிகள் வீட்டில் இருந்தேன். இதில் பெரிய மாமி சாது. மரியாதை உண்டு. ஆனால் சின்னமாமி மேல் அதிகமாக பிடிக்கும். வெள்ளை நிறமும் உயரமான தோற்றமும் கொண்டவர். நிலத்தை கூட்டும் போது கூட எனது மாமி தலை குனிந்து பார்த்ததில்லை. எவரோடும் எடுத்தெறிந்து பேசும் தன்மையும் நடக்கும் போது நிமிர்ந்து பார்த்தபடி தான் நடப்பது வழக்கம். அக்காலத்தில் மாமிக்கு பக்கத்தில் செல்வது பெருமையான…