கவிஞர் சல்மா.

சமீபத்தில் ஒரு வார காலப்பயணமாக எகிப்து சென்று வந்த அனுபவங்களை சிறு கட்டுரையாக எழுதினேன். தற்செயலாக இந்த புத்தகம் பற்றி அறிந்து வாங்கி வாசித்த பிறகு என் பயணத்திற்கு முன்பாக இந்த புத்தகத்தை வாசித்து விட்டு செல்லவில்லையே என்கிற வருத்தம் மேலிட்டது. எகிப்தின் வரலாறு, நிலம், வளம், வாழ்க்கை என சகலத்தையும் கவனமாக வும் சுவராஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் நோயல் நடேசன். யாரேனும் இனி எகிப்து பயணத்திற்கு திட்டமிடுவீர்கள் எனில் இந்த புத்தகத்தை வாசித்து விட்டு பயணத்தை திட்டமிடலாம், ஏதொன்றும் விடுபடாத அளவு அங்குள்ள அதிசயங்களை கண்டு வரலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்