அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
இலக்கியத் திறனாய்வாளர்

இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில்
—————————————-
இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத்
திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும்
நினைவுகூர்ந்து உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை எமது
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை
மெய்நிகரில், சங்கத்தின் தலைவர் திருமதி சகுந்தலா கணநாதன் தலைமையில் ஏற்பாடு
செய்துள்ளது.
இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
மெல்பனிலிருந்து எழுத்தாளர்கள் லெ.முருகபூபதி, நோயெல் நடேசன், சிட்னியிலிருந்து
எழுத்தாளர், சட்டத்தரணி, சந்திரிகா சுப்பிரமணியம், எழுத்தாளரும், ஒலிபரப்பாளருமான
கானா.பிரபா,
பேராசிரியர் மு. நித்தியானந்தன் ( இலண்டன்),
இலங்கையிலிருந்து, பேராசிரியர் மௌனகுரு, கவிஞர் பூர்ணிமா கருணாகரன், எழுத்தாளரும்
பத்திரிகையாளருமான செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் மற்றும்
கவிஞரும், ஒலிபரப்பாளருமான கோவிலூர் செல்வராஜன் (இலண்டன்), ஊடகவியலாளர் வரதராசா
மரியாம்பிள்ளை (நியூசிலாந்து) முதலிய பலர் இந்த நிகழ்ச்சியில், அமரர் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களைப்பற்றிக் கருத்துரையாற்றவுள்ளார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
சட்டத்தரணி பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா
மெய்நிகர் இணைப்பு:
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84185296033?pwd=Nk42STFLeTFRY04wTlNhYWNweWN1QT09
Meeting ID: 841 8529 6033
Passcode: 677724
—- —- —- —- —-
அவுஸ்திரேலியா நேரம் இரவு 8-00 மணி
இலங்கை – இந்திய நேரம் : பிற்பகல் 2-30 மணி.
இங்கிலாந்து நேரம் : முற்பகல் 10– 00 மணி.
ஜேர்மனி – பிரான்ஸ் – நோர்வே : முற்பகல் 11.00 மணி.
நியூசிலாந்து : இரவு 10-00 மணி.
கனடா : காலை 5.00 மணி.
மறுமொழியொன்றை இடுங்கள்