எனது புத்தகங்களைப்பற்றி நான் மதிக்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களான ஞானி , ஜெயமோகன், எஸ் ஆர் ராமகிருஷ்ணன் சிவகாமி(IAS) மாலன் பேராசிரியர் ராமசாமி எனப் பலர் எழுதியுள்ளார்கள். அதே போல் இலங்கை எழுத்தாளர்கள் தெளிவத்தை யோசப், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கருணாகரன் முருகபூபதி எனப்பலர் எழுதியுள்ளார்கள் . இதைவிடப் பலர் நண்பர்களும் எழுதியுள்ளார்கள். இவர்கள் என்னை அறிந்தவர்கள் .என்னை அறியாது புத்தகத்தை மட்டும் படித்து எழுதியவர்கள் பலர். தற்போது தேனி கால்நடைமருத்துவ பலகலைக்கழகத்தில் படிக்கும் மாணவி எனது புத்தகத்தைப்பற்றி எழுதியது வித்தியாசமானது . காரணம் எனது கருத்துகள் எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்றுள்ளது மகிழ்வைக் கொடுக்கிறது. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்