ஏழு கடல்கன்னிகள்

உங்கள் நூல் விமர்சனம் அருமை. தமயந்தி வட புலத்தில் உள்ள தீவுகளில் வாழ்ந்ததனால் சொற்பிரயோகத்தில் மண்வாசனை ஒட்டிக்கொண்டிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் வலிந்து புகுத்தப்பட்ட எந்த வாசனையும் மணப்பதில்லை.

எலியட்டில் ஆங்கிலக் கவிதையும் சோவியத்தின் போல்சுவிக்குக்கு எதிராக எழுதப்பட்டது என குறிப்பிட்டிருந்தீர்கள் என நினைவு.

இது பற்றி மேலும் அறிய படித்ததில் கிடைத்தவற்றை கீழே ஒட்டித்தந்துள்ளேன்.

 The Waste Land இன் முதல் வரியிலேயே எலியட் ஏப்ரல் மாதத்திற்கு கறை பூசி எம்மை ஒரு இருண்ட உலகுக்கு தயார்படுத்திக் கொள்கிறார். ஆபிரிக்கக் காட்டில் கொதிகலனுக்குள் நுழையத் தயாராகும் மனித சதைப்பிண்டத்தின் மனஉணர்வு வாசகனுக்கு ஏற்படுவது இயல்பே. சுற்றி நின்று கூக்குரலிலும் அந்த காட்டுமிராண்டிகளின் குதூகலிப்பு கேட்கிறதா?

1918ல் ஸ்பனிஸ் காய்ச்சலில் ஒரு கோடி உயிர்களை இழந்து நின்றது உலகு. இக்காய்ச்சலில் இருந்து தேறும்போதே எலியட் தன் கழிவு நிலத்திற்கு (Waste Land) உருவம் கொடுத்தார். உலகப் பேரின் பின் உதித்த இந்த நவீன இலக்கியத்தில் நாம் எம்மை மீண்டும் இணைத்துக் கொண்டு சுகம் கண்டோம். கொரோனா தந்த வேதனையில் மீண்டும் இதுபோன்ற கவிதைகள் புதிய தலையணை உறையை மாட்டிக்கொண்டு எம் மனப்பஞ்சணையில் வந்து குந்திக்கொண்டன. இதில் நிச்சயம் சுகம் கண்டோம்.

கழிவு நிலம் அல்லாத நித்திய பூமியில் ஏப்ரல் மாதமே வசந்தகாலம். புதியன புகுந்து எங்கும் உயிர்களின் நம்பிக்கை துளிர் விடும் காலம். ஆனால் எலியட்டின் ஏப்ரல் மாதத்திற்கு அழுகையும் பற்கடிப்புமே சொந்தம். கழிவு நிலத்தில் வேறு எதை எதிர்பார்த்தீர்கள்?  

எலியட் மணவாழ்வில் சம்பாதித்த வேதனை வடுக்களில் இருந்து வடிந்த குருதியில் எழுதியதே The Waste Land. மனைவிக்கும் மனோ நிபுணர் Bernard Russell இடையே மலர்ந்து உறவு, மனைவியின்  மனோ வியாதி ஊதிிப்பெரிதாக்கிய      இடைவெளி போன்றவையே எலியட்டின் இந்த வேதனை வரிகளின் ஊற்றுக்கண்.

இக்கவிதை பலர் கண்களில் பட்டது 1922ல். நம்பிக்கைப் பொறி சுடராக எரிந்தது 1930ல், இதன் பிரதிபலிப்பே எலியட்டின் Ash Wednesday. Hope என்ற சொல்லை அள்ளித்தெளித்தார் எங்கும் அவர்! All lived happily ever after என்பது இதைத்தானோ?

Because I do not hope to turn again

Because I do not hope

Because I do not hope to turn

Desiring this man’s gift and that man’s scope

I no longer strive to strive towards such things

(Why should the agèd eagle stretch its wings?)

Why should I mourn

The vanished power of the usual reign?

நன்றி

கிறிஸ்டி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: