






பாஸ்போர்ட் விசா டிராவலிங் அரேஞ்ச்மெனட்ஸ் ஜெட் லாக் தீவிரவாதிங்க பயம் ஃபுட் பாய்சனிங் எந்த கஷ்டமும் படத்தேவையில்ல
நடேசன் சார் நம்மள ஃப்ரீயா எகிப்து சுத்திக்காட்டிட்டார். அவரேதான் செலவு எல்லாம் போட்டுக்கறார். அவரேதான் கைடு. சாதா கைடு இல்ல வெட்னரி டாக்டர் கைடு. போற இடத்துல ஏற்படற சங்கடங்களைக்கூட (உதா. சாராய பாட்டில் பேசின மச்சான் என்னைக்காப்பாற்று டயலாக்) நகைச்சுவை உணர்வு கலந்து இனிப்பா சொல்ர கைடு. ரொம்ப இயல்பா நம்ம மனசுல தோணுறதை நாம கேட்காமயே கண்டுபுடிச்சு அவரே அதுக்கு பதிலும் சொல்லிடுவார்.
உதா.பெல்லி டான்ஸ்,
காசினோவில் சூதாடிய சூடானிய இஸ்லாமியர்
இந்த எகிப்து வரலாறு, கிரேக்க வரலாறு, ரோம வரலாறு, பைபிள் கதைகள், அப்புறம் எகிப்தியர்கள், யூதர்கள், பிளிஸ்தினியர்கள், நூபியர்கள் (கருப்பு எகிப்தியர் அதாவது ஆப்பிரிக்கர்), ஹிட்டிரைட்டுகள் (துருக்கியர்கள்) இப்படி பலரோட கதைகளை புரியறமாதிரி சொல்லி அவிங்க வரலாற்றை இன்னும் ஆர்வமா தேடவைச்சிடறார்.
இது எல்லாவற்றையும்விட பிடிச்சது அவர் ஒரு உதாரணபுருசன்னு நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல
அந்த உதாரணங்கள்தான்
மம்மியாக்குவது என்பது மீனைக்கருவாடாக்குவதற்கு ஒப்பானது
பாயாசத்தில் முந்திரிகளாக விரவிக்கிடக்கும் தகவல்துணுக்குகளை சொல்ல ஆரம்பித்தால்…
…புத்தகம் வாங்கிப்படிக்கவேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு தோன்றாது ஆதலால் …. 🙏🏼
மறுமொழியொன்றை இடுங்கள்