முதலில் உங்களுக்கு ஒரு பலத்த கைத்தட்டல் சார்
அருமையான கதை அதுவும் இறுதி வரிகள் அதிர வைக்கிறது. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘காவல் கோட்டம்’ புத்தகத்திலும் ஏறத்தாழ இதே மாதிரி ஒரு அழகான மங்கை தன்னை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்ட மன்னனை பழி வாங்க நினைத்து வேறொருவனுடன் கூடி அது அந்ந மன்னனுக்கு தெரிந்து அவளையும் அவனையும் கொன்று பழியை வேறொருவர் மீது போட்டு… அது ‘அரவான்’ என்ற படமாக வந்தது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும் சார். இதில் காமம் என்பது காமமாக இல்லாமல் பழி வாங்க ஒரு பெண் எடுக்கும் ஆயுதமாக உள்ளது. அதுவும் இறுதி வரிகளை இரு விதமாக எடுத்துக்கொள்ளலாம். அய்யோ பேய் என்று நினைத்து மெல்லிய சிரிப்பு அல்லது அவளின் கோபக்கனல் இறந்தாலும் தீராது இன்னும் அவனை பழிவாங்க துடிக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பெண் எடுத்த ஆயுதம் அவளை இன்னும் சித்திரவதைக்குள்ளாக்கி இறப்பை ஏற்படுத்தியதே தவிர சிறிலுக்கு ஒன்றுமே பாதிப்பில்லை என்பது தான் உண்மை. பழி வாங்குகிறேன் என்று நினைத்து இப்படி மாண்டுபோகிறார்கள். வருத்தத்துடன்….
டாக்டர் மதன்
———-
நடை ஓட்டத்தின் இயல்பு என்னை மிகவும் ஈர்த்ததில் காலைப்பொழுது, பணிக்குப் போகும் நேரம் என்பதை மறந்து படித்து முடித்தேன்.
விருப்பமில்லாதப் பெண்ணை வலிந்து வாழ்க்கைக் கொண்டால் பழிவாங்கும் தன்மை அந்தப் பெண்ணின் மனதில் நீங்காது நிலைபெறும், அதுவும் ஆவி அடங்கிய போதும் என்பது அவளின் ஆழ்மன வலியின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
Dr Radja
அய்யோ…அம்மா…பேய்…பிசாசு… யட்சி….மோகினி
–+
பிடி சாமி ராஜேந்திரகுமார் மலையாள யட்சிமோகினி கதைலாம் படிச்ச ஃபீலிங்
Dr Karthik

மறுமொழியொன்றை இடுங்கள்