Dr. Madhan Kumar. N
இந்த கட்டுரையில் (கட்டுரை என்று சொல்வதற்கு காரணம் இருக்கு. இக்கட்டுரையில் நிறைய தகவல்கள் அடங்கியுள்ளது) மூன்று முக்கிய விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது. முதலாவது மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் அதை அணுகும் விதமும். அடித்தட்டில் உள்ள மக்கள் வேற்று சமயத்தையும் தங்களின் குறைகளுக்காக எந்தவித பாகுபாடின்றி அணுகியுள்ளனர். இது மத சகிப்புத்தன்மை என்று எடுத்துக்கொள்வது தவறு. யாரும் எதையும் சகித்து வாழவில்லை எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறார்கள். இது தான் ‘தெய்வம் என்பதோர்’ புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பேய் ஓட்டுபவர்கள். இவர்கள் எதாவது ஒரு புனித நூலை படித்துக்கொண்டு எல்லோருடைய கவனம் அதில் இருக்கும் போது நெற்றியின் மத்தியில் (stunning) வேகமாக ஒரு அழுத்தத்தை தரும்போது நிலை தடுமாறி கீழே விழுகிறார்கள். அப்படியும் விழாதவர்களை கட்டைவிரல் மீது அழுத்தி நிலைதடுமாற்றம் உண்டாக்கி தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே ஆட்டம் ஆடி உடல் சோர்வு கொண்டவர்கள் இப்படி தள்ளும்போது சிறிது மூர்ச்சையாகி விழுகிறார்கள். (பேட்டை புத்தகத்தில் படித்தது).
மூன்றாவது தலைமுறைகளுக்கு கடத்தப்படும் மரபணு சார்ந்த நோய்களும் மனநிலையை சார்ந்த குறைபாடுகளும். In-breeding க்கு சான்றாக கூறப்பட்ட ஒஸ்கார் நாய். நானும் நேரில் இப்படிப்பட்ட சான்றுகளை மனிதர்களில் காண்கிறேன். இந்த காலத்திலும் உட்புற கிராமப்புறங்களில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள். சரியான விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது என்றே தோணுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்