நம்மவர் நிகழ்வு
எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளுடாக பெண்ணிய வெளிப்பாட்டை எடுத்துப் பேசுவதே நமது நிகழ்வின் நோக்கம். பல நாடுகளில் பெண்ணியம் என்பது கல்வித்துறை மற்றும் சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டது. அதன் விளைவை நமது சகோதரிகள், பெண் குழந்தைகள் அனுபவிக்கிறார்கள். பல நாடுகளில் அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் பெண்களுக்காக முக்கிய இடங்களை ஒதுக்கியுள்ளார்கள். இவை மரத்தில் தானாக இருந்து உதிரும் கனிகளாக விழவில்லை. பலர் உயிர், மற்றும் உழைப்பைக் கொடுத்தபின் விளைந்த அறுவடையைத்தான் இப்பொழுது பெண்கள் அனைவரும் அனுபவிக்கிறார்கள்.
பலகாலமாக உலக இலக்கிய வரலாற்றில் பெண்ணியம் முக்கிய பகுதியாகிவிட்டது. அதில் Virginia Woolf, Toni Morrison இருவரைச் சிறிது வாசித்துள்ளேன் தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் ஒரு பாடநெறியாக உள்ளதாக டாகடர் பிரேமா என்னிடம் பேசியபோது கூறினார் -அது மகிழ்வான விடயம்.
தமிழ் இலக்கியத்தில் பெண்ணியக் கவிதைகள் , கட்டுரைகள் சிறுகதைகள் ஆங்காங்கு தென்பட்டபோதும் இன்னமும் பெண்ணியத்திற்கு ஒரு பிரத்தியேக இடம் கொடுக்கப்படவில்லை. பல பெண் எழுத்தாளர்களும் தங்களைப் பொதுமைப்படுத்தி எழுத விளைகிறார்கள் – அதற்கான காரணங்கள் பல. அவை நாங்கள் எதிர்காலத்தில் விவாதிக்க வேண்டியவை
இந்த நிலையில் இன்று நாம் தெளிவாக இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைகளை இங்கு பிரித்துப் பேசவிரும்புகிறோம்
நாங்கள் பேச இருக்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பல முகங்கள் கொண்டவரென்பதால் அவரை அறிமுகப்படுத்த எழுத்தாளர் முருகபூபதி வருகிறார் முருகபூபதி எழுத்தாளர் , பத்திரிகையாளர் மற்றும் சமூக சேவையாளர் மட்டுமல்ல சிவாஜி கணேசனின் நவராத்திரி படததைபோல் பல முகங்கொண்டவர். ஆனால் நடிப்பவரல்ல. எனது நண்பன் இவரை ஒரு இயக்கமென்பர் அப்படியான முருகபூபதியை நான் இங்கு அழைக்கிறேன்.
———————————————–
பேராசிரியர் Dr பிரேமா சென்னையைச் சேர்ந்தவர் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பிறந்து, முதுகலை மற்றும் முனைவர் ( கலாநிதி ) பட்டங்களைப் பெற்றவர் .மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி. பின்பு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் துணைப் பேராசிரியராக இருந்தவர்.
ஏராளமான விருதுகள், பதக்கங்கள் பெற்றவர். முக்கியமாகப் பெண்ணியம் பெண் விடுதலை சம்பந்தமான நூல்களை எழுதி உள்ளார். அதே துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார.
வாசந்தி சுந்தரம்: பத்திரிகையாளர் நாவலாசிரியர். நியு டெல்கி எல்லோருக்கும் தெரிந்தவர் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் படித்தவர். பல வருடங்கள் இந்தியா ருடேயின் ஆசிரியர். பல பத்திரிகைகளில் இரு மொழிகளிலும் எழுதுபவர் . நாவல் சிறுகதை எழுத்தாளர். இலங்கையைப்பற்றி அதிகம் எழுதியவர் அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய புத்தகத்தை எழுதியவர் பல விருதுகள் பெற்றவர் அத்துடன் இவரது நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டவ.
நவஜோதி ஜோகரட்னம்: இலக்கிய விமர்சகர் லண்டன் மறைந்த ஈழத்து எழுத்தாளர் அகஸ்தியரின் புதல்வி . ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியராக இலங்கையில் பல இடங்களில் பணியாற்றியவர் விருது பெற்ற பல சிறுகதைகளை எழுதியவர் இப்பொழுதும் இங்கிலாந்தில் ஆசிரியத் தொழிலுடன் சமூக வானொலி மேடை நிகழ்வுத் தொகுப்பு இலக்கிய விமர்சனம் எனப் பல தளங்களில் இயங்குபவர்.
மறுமொழியொன்றை இடுங்கள்