மொழிபெயர்ப்பு ஏன் என்பது பல மொழி பேசும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களாகிய எமக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய மொழி பெயர்ப்பாகும்.
மற்றைய மொழிகளிலிருந்து ஏன் இலக்கியத்தை மொழி பெயர்க்கவேண்டும்?
அதேபோல் நமது இலக்கியங்கள்தான் ஏன் மற்றைய மொழிகளில் வரவேண்டுமென்பதற்கான சில காரணங்களைப் பார்ப்போம் .
1)மொழி என்பது கலாச்சாரம், பண்பாடுகளை வைத்துப் பாதுகாக்கும் ஒரு களஞ்சியம் . மொழியை அறிந்தால் மட்டுமே கலாச்சாரத்தை அறியமுடியும். புரட்சிக்கு முன்பான ரஸ்சிய, பிரான்சிய கலாச்சாரங்கள் புரிய மொழி தெரியவேண்டும் அதேபோல் கிரிக்க கலாச்சாரத்தை நாம் தெரிந்து கொள்வது எப்படி?
பண்டைய எகிப்தியர்களது கலாச்சாரத்தை அறிவதற்கு எகிப்தியல் அறிஞர்களுக்கு முதலில் (Hieroglyph) என்ற பண்டைய எகிப்திய மொழி தெரிய வேண்டும் .
2) மொழி மனிதர்களின் அடிப்படையான குணாம்சங்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. டால்ரோயின்- ரஸ்சிய அனா கரீனினாவும், கஸ்ரவ் புளொபேட்னது மாடம் போவரியும், நமது கிளிநொச்சியைச் சேர்ந்த கோகிலாம்பாளும் தங்களுக்குப் பிடித்த துணையைத் தொடர்ச்சியாகத் தேடும்போது அங்கு தற்கொலைகள், கொலை நடக்கிறது –
மானிட உணர்வுகள் அடிப்படையில் ஒன்றானவை- இது உயிரியலால் விதிக்கப்பட்ட செயற்பாடு.
3)மொழியை அறிவதன் மூலம் புதிய வகையான இலக்கியங்களை அறியமுடிகிறது. புராணம், இதிகாசம், காப்பியம் என்று மட்டுமிருந்த எமது இலக்கிய மொழி மேற்கு நாட்டு இலக்கியங்களால் வளமடைந்ததது. நவீனத் தமிழை நமக்கு அறிமுகப்படுத்திய பாரதி, புதுமைப்பித்தன் ஆங்கிலம் புலமை பெற்றவர்கள்.
4)மொழிபெயர்ப்பு எமது மொழியை வளர்க்கிறது புதிய சொற்கள் வந்து சேருகின்றன . எங்களது மொழிக்கு வந்த பல குறியீடுகள் ஆங்கிலத்திலிருந்து ( லத்தீன்) வந்தவை.முற்றுப்புள்ளி மட்டுமே நம்மிடம் இருந்தது. கற்பாறைகளில் மட்டும் குத்துவோம், ஆனால் ஓலைகளில் ஓட்டை விழுந்துவிடுமென விட்டு விடுவோம்.
5) இலக்கியத்தில் , மாயா யதார்த்தம் பின்நவீனத்துவம் எல்லாம் நாம் வெளியிருந்து பெற்றவை. மாயா யதாரத்தம், தென் அமரிக்கவிலிருந்து பெற்று சல்மான் ருஷ்டி , ரோனி மொறிசன் போன்றவர்கள் எழுதினார்கள் . நானே இதைப் பாவித்தேன்.
6) மொழிபெயர்ப்பு நமக்குச் சிறந்த புத்தகத்தைத் தரும் . எமது வாழ்வு அதிக காலமானது அல்ல. இக்காலத்தில் சிறந்ததை மட்டும் வாசிப்பது என்றால் நாம் மொழி பெயர்ப்புகளைத் தேடவேண்டும்.
7) இளம் எழுத்தாளர்கள் மொழி பெயர்ப்புகளைப் படிப்பதன்மூலம் தைரியத்தையும் அறிவையும் பெறமுடியும்
8)புதிய வாசகர்களைப் பெறமுடியுமாம்- இசபல் அலண்டேயின் புத்தகங்கள் அவரது மொழியான ஸ்பானிசை விட ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாகும் தமிழ்நாட்டில் பெருமாள் முருகனது மாதொரு பாகன் பல நாடுகளில் விற்பனையாகிறது
9) எழுத்தாளர் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது.
இவை மட்டுமே நாம் மொழி பெயர்ப்பை நேசிக்க போதுமானவை அல்லவா?
பல மொழி பெயர்ப்புகள் தமிழில் தரமாக இருப்பதில்லை- வாசிக்க முடியாது. காரணம் தனிநபர்கள் செயல்பாடுகள்
தற்போதைய பைபிள், லத்தினிலிருந்து ஆங்கிலமயப்படுத்த பிரித்தானிய அரசர்( King James ) குழுவை நியமித்து, அவர்கள் செய்பட்டார்கள்.பைபிளே உலக இலக்கியத்தில் சாமானியர்களைப்பற்றி பேசியது முதல் படைப்பு .
நமக்கு அப்படியான நிறுவனமான அமைப்பு இல்லை- எதிர்காலம் எப்படியோ?
மறுமொழியொன்றை இடுங்கள்