Month: ஒக்ரோபர் 2021
-
21 கரையில் மோதும் நினைவலைகள்
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஓரே உடையில் மூன்று கிழமை நடேசன் நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் முதல் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப நடப்பதுவே முக்கியமான விடயமாக இருந்தது. தமிழில் படித்துவிட்டுப் போன எனக்கு ஆங்கிலத்தில் படிப்பது இலகுவாக இருக்கவில்லை. நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு எட்டாம் வகுப்பில் செல்லும்வரை ஆங்கிலம் அறியவில்லை. சிங்களத்தில், ஆங்கிலத்தைக் கடு என்பார்கள் ( அதன் கடுமையைக் கருதி ) ஆனால், வேறு வழியில்லை. உணவும் பிரச்சனையாக இருந்தது. இதுவரையில் […]
-
ராஜம் கிருஷ்ணன் ( 1925-2014 )
ஒக்டோபர் 20 – நினைவு தினம் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்ற ஆளுமை ! முருகபூபதி இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்ற 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருகை தந்து கொழும்பு – யாழ்ப்பாணம் உட்பட பல பாகங்களிலும் உரையாற்றியவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். அவர் மறைந்து இன்றுடன் ( ஒக்டோபர் 20 ) ஏழு வருடங்களாகிவிட்டன. 2012 ஆம் வருடம் தமிழகம் சென்று ராஜம்கிருஷ்ணனை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை – பொரூர் இராமச்சந்திரா […]
-
Giving up cigarettes for a dog
Pamela would always come to the hospital dressed in the same cigarette-smelling clothes. Her entry always amused the members of staff of the veterinary hospital, from receptionists at the front desk to nurses and veterinarians who are supposed to treat people with empathy and courtesy. I noticed nurses and other veterinarians covering their noses and […]
-
20 கரையில் மோதும் நினைவலைகள்:மெல்பனில் உதயம்
நடேசன் மெல்பனில் உதயம் பத்திரிகையை நடத்தும்போது, அதற்கான விளம்பரம் மற்றும் விநியோக வேலைகளை கவனிப்பதற்காக மதிய நேரங்களில் எனது கிளினிக்கில் இருந்து மதிய உணவுக்குச் செல்வதாகச் சொல்லி மறைந்துவிடுவேன். சிலர் அவசர சிகிச்சைக்காக நோயுற்ற தமது வளர்ப்பு பிராணிகளைக் கொண்டு வருவார்கள். நான் அப்போது அங்கில்லாதமையால் என்னை மனதுக்குள் திட்டியபடியே எனது நேர்ஸ்கள் அவர்களை வேறு கிளினிக்குகளுக்கு அனுப்புவார்கள். நான் கடமையில் இல்லை என்று அச்சமயம் அவர்களிடம் சொல்வது எனது நேர்ஸ்களுக்கு பிடிக்காது. ஆனால், அதனை நேரடியாக […]
-
ஏன் மொழிபெயர்ப்புகள் வேண்டும்?
மொழிபெயர்ப்பு ஏன் என்பது பல மொழி பேசும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களாகிய எமக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. இங்கு நான் குறிப்பிடுவது இலக்கிய மொழி பெயர்ப்பாகும். மற்றைய மொழிகளிலிருந்து ஏன் இலக்கியத்தை மொழி பெயர்க்கவேண்டும்? அதேபோல் நமது இலக்கியங்கள்தான் ஏன் மற்றைய மொழிகளில் வரவேண்டுமென்பதற்கான சில காரணங்களைப் பார்ப்போம் . 1)மொழி என்பது கலாச்சாரம், பண்பாடுகளை வைத்துப் பாதுகாக்கும் ஒரு களஞ்சியம் . மொழியை அறிந்தால் மட்டுமே கலாச்சாரத்தை அறியமுடியும். புரட்சிக்கு முன்பான ரஸ்சிய, பிரான்சிய கலாச்சாரங்கள் புரிய மொழி தெரியவேண்டும் அதேபோல் கிரிக்க கலாச்சாரத்தை நாம் […]
-
19. கரையில் மோதும் நினைவலைகள்: துரையப்பா மேயரின் கொலை.
நடேசன் கொக்குவிலில் ரயில்வே நிலையத்தில் இறங்கி, வீடு சென்றபோது இருளாகிவிட்டது. நான் விடுமுறையில் வருவேன் என, வீட்டு விறாந்தையில் அம்மா உட்கார்ந்திருந்த காட்சி இன்னமும் விழித்திரையில் பதிவாக உள்ளது. இருளில் வந்த என்னை முகத்தில் முத்தமிட்டபடி வரவேற்ற அம்மா, கேட்ட முதற்கேள்வி “அங்கு உனக்குச் சாப்பாடு ஒழுங்காகக் கிடைப்பதில்லையா? “ எந்தவொரு தாய்மாரும் தமது பிள்ளைகளிடம் ஒழுங்காகப் படிக்கிறாயா ? என்று கேட்பதற்குப் பதிலாக உடல் ஆரோக்கியத்தைப் பற்றியே கேள்வி கேட்டு கவலைப்படுவார்கள். பெற்ற மனதின் இயல்பு […]