
ஒரு மனிதன் தேவதையிடம் தனக்கு முத்து குவியல் வேண்டும் என வரம் கேட்டான். தேவதை ‘நீ அழுதால் வரும் கண்ணீர் ஒவ்வொன்றும் முத்தாகும்’ என வரம் கொடுத்தது.
அந்த மனிதன் அழத்தொடங்கினான். ஆனால் அழுகை வரவில்லை. இறந்து போன தாய் – தந்தையை நினைத்தான். சிறிதளவு வந்த கண்ணீர் துளிகள் முத்துகளாகின. பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து தனது குடும்பத்தை குத்தத் தொடங்கினான். கண்ணீர் ஆறாகப் பெருகி வீட்டில் முத்துகளாகின.
கண்ணைத் துடைத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தபோது மனைவியும் ஒரே குழந்தையும் குத்தப்பட்டு இறந்து அருகில் கிடந்தன.
மறுமொழியொன்றை இடுங்கள்