எழுத்தாளர் சுதாராஜ்
முதலில் பிங்கோவுக்கு மேற்கொள்ளும் சத்திர சிகிச்சையை வாசிக்கும்போது மனப்பதட்டமாயிருந்தது. ஏனெனில் உங்களைப்போலவே சக பிராணிகளை நேசிக்கும் மனது கொண்டவன் நான். அடுத்த கட்டத்தில் அடிக்காவின் நடவடிக்கைகள்! அவளுக்கு மனோவியாதியில்லை… மனக்கசிவு என நினைக்கிறேன். பிங்கோவின் சிகிச்சையின்போது தவறான நூலைக் கொடுத்துவிட்டேனோ என மனம் கலங்குகிறாள். அந்த சீவனுக்கு தன் காரணமாக ஏதும் மோசம் நடந்துவிடக்கூடாதே என்றும், தனது மனதை ஆற்றுவதற்காகவேனும் அதை உறுதி செய்துகொள்ள முயல்கிறாள். பின்னர் கதை இன்னொரு பக்கம் திரும்புகிறது! கணவர் மத்தியு பற்றிய அவளது கற்பனை வாழ்வு. ஏதோ ஒரு காரணத்தால் உரிய பருவத்தில் மணமுடிக்க முடியாதுபோன ஆண்சுகமற்ற வாழ்க்கையின் மனவலிகள் அவளை ஒருவிதமான மனோவியாதிக்குள்ளாக்கியதா? மனத்தொந்தரவுக்குள்ளாக்கிய கதை. வாழ்த்துக்கள் நடேசன்,
மறுமொழியொன்றை இடுங்கள்