Month: ஜூன் 2021
-
11கரையில் மோதும் நினைவலைகள்:நிரந்தர வேலை
நடேசன் “ உங்கண்ணன்கள் மாதிரி வந்திராதே “ என அடிக்கடி இரண்டு வார்த்தைகள் மந்திரமாக உச்சரிக்கப்படும். எனது இரண்டு அண்ணன்மார் அக்காலத்தில் காதல் திருமணம் செய்ததால் தங்களது கல்வியையும் வசதியான வாழ்வையும் தொலைத்தவர்கள் என்பது அம்மாவின் கருத்து. எனது ஒன்று விட்ட அண்ணர்மார் இருவரை உதாரணமாகக் காட்டுவார். காணும் பெண்களை எல்லாம் காம உணர்வோடு பார்க்கும் விடலைப் பருவத்தில் அம்மாவின் வார்த்தைகள் கடல் நீராக நாக்கில் கரிக்கும். வீட்டில் வேலை செய்த பெண் சிறுமி ஒருத்தி […]