Samsu Deen Heera

ஒரு ஓய்வு நாளின் மாலைநேரத் தேநீர் போல ஒரு புதினத்தைச் சுவைக்க விரும்பினால் நடேசன் எழுதிய ‘அசோகனின் வைத்தியசாலை’ வாசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் ஒரு விலங்குகள் மருத்துவமனையில் பணிபுரியும் புலம்பெயர் தமிழரான சுந்தரம் பிள்ளையின் அனுபவங்களின் தொகுப்பாகவே இந்நூல் விரிகிறது. சலிப்பூட்டும் விவரனைகளோ திகட்டும் வர்னனைகளோ இல்லாத இயல்பான மொழிநடையால் 400 பக்கங்களை தடையின்றிக் கடந்துவிட முடிகிறது. மேடு பள்ளங்களற்ற சமவெளியில் பாயும் நீரோடை போல சலனமில்லாமல் பயணிக்கும் கதையோட்டம். ஆசிரியர் நடேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
மறுமொழியொன்றை இடுங்கள்