Monthly Archives: ஜூன் 2021

எஸ் பொவின் தீ – நாவல்

கபிரியல் காசியா மார்குவசின் ‘லவ் இன் த ரைம் ஒவ் கொலரா’ (Love in the time of cholera), எனக்கு மிகவும் பிடித்த நாவல். அந்த நாவலை அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் உயர்தர வகுப்பினருக்கு (Year12), ஆங்கில இலக்கியப் பாடப் புத்தகமாக்க விரும்பியபோது,  அதற்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். ஒரு சிறிய சம்பவமே … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

13) கரையில் மோதும் நினைவலைகள்: அம்மாவின் பாசம்

எனது பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை, 1974   சித்திரை மாதம்  முடிவடைந்ததும் எல்லா பாடங்களும் தேறிவிடுவேன் என்பதுடன் நல்ல புள்ளகளும் எடுப்பேன் என்பது தெரிந்தது. மற்றைய மாணவர்கள்போல் வைத்தியராகவேண்டுமென்பது பெரிதாக ஆசையில்லை. ஆனால், அதற்கான சந்தர்ப்பம்  வந்தால்  அந்தத்துறையில் படிக்கப் போவேன் என்ற எண்ணம் முளைத்திருந்தது . எங்களது நெருங்கிய உறவினர்களில் வைத்தியர்களென எவருமில்லை. அத்துடன் சிறு … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

‘அசோகனின் வைத்தியசாலை’

Samsu Deen Heera ஒரு ஓய்வு நாளின் மாலைநேரத் தேநீர் போல ஒரு புதினத்தைச் சுவைக்க விரும்பினால் நடேசன் எழுதிய ‘அசோகனின் வைத்தியசாலை’ வாசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் ஒரு விலங்குகள் மருத்துவமனையில் பணிபுரியும் புலம்பெயர் தமிழரான சுந்தரம் பிள்ளையின் அனுபவங்களின் தொகுப்பாகவே இந்நூல் விரிகிறது. சலிப்பூட்டும் விவரனைகளோ திகட்டும் வர்னனைகளோ இல்லாத இயல்பான மொழிநடையால் 400 பக்கங்களை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

  பௌர்ணமியில் ஒரு மரணம்

சமூக அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய          பௌர்ணமியில்  ஒரு  மரணம்                         Death on a Full moon day சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே                                                                       முருகபூபதி காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட  அந்தச்சிங்களக் கிராமத்தில்  ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன்.  … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கரையில் மோதும் நினைவலைகள்12 : மஞ்சள் கடிதம்

சிவவீரசிங்கம் மாஸ்ரரின் ரியூசன் வகுப்புத் தொடங்கியபோதும் எனது சிந்தனை ஒருமுகப்படவில்லை. இரப்பையில்  அமிலம் காட்டாறாகியது. இதயம் வெளியேவர, அவசரமாக நெஞ்சாங் கூட்டைத்  தட்டியது.  என்னை மீறிய பரபரப்பில் அடிக்கடி  பின்னால் திரும்பிப் பார்த்த படியிருந்ததேன். நல்ல வேளை கடைசி வரிசையில் நானிருந்தேன். மற்றவர்களைக்  காணவில்லை. புன்னகை தவழ,  இளம் பச்சை சட்டையோடு நான் எதிர்பார்த்தபடி சிட்டுக்குருவி … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

துவாரகை

நடேசன். என் மனைவி சியாமளா கோமதி (Gomti river, Dwarka)  ஆற்றின் தண்ணீர் வற்றிய நதிப்படுக்கையில்,  ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு,  வெறும் கால்களால் நடப்பது தனது கால்களுக்கு இதமாக இருக்கிறது  என நடந்தபோது,  எதிரே வந்த  ஒட்டகசாரதி தனது ஒட்டகத்தில் ஏறும்படி வற்புறுத்தினான்.  அவர்களிடமிருந்து விலகி,    நான் எனது  கமராவுடன் துவாரகேஸ்வரர்  கோவிலின் வெளிப்பகுதியில்,  கோமதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வாழும்போது வாழ்த்துவோம் – கொண்டாடுவோம்

 “ நம்மவர் பேசுகிறார்  “  அரங்கில்….. கிழக்கிலங்கையின் ஆத்மாவை இலக்கியத்தில் பிரதிபலித்த எஸ். எல். எம். ஹனீஃபா !                                                                           முருகபூபதி ஆளுமைகள்  மறைந்தபின்னர், அவர்கள் குறித்து நாம் பேசுவதும் எழுதுவதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் மரபாகவே தொடர்வது பற்றி பலரும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர்.  மறைந்தவர்களுக்கு,  நாம் என்ன பேசினோம், எவ்வாறு எழுதினோம் என்பது தெரியாது … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

வாழநினைத்தால் வாழலாம்.

இந்து சமயத்தில் ஹரனும் ஹரியும் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் என்னும் தெய்வத்தை உருவாக்கினார்கள். இரண்டு ஆண் தெய்வங்களுக்கு வாரிசான ஐயப்பனுக்கு மாலை போட்டால் அம்மாதம் முழுவதும் பெண் உறவை தவிர்க்க வேண்டும். இந்த கதையின் அடிமூலத்தை நான் ஆராய விரும்பவில்லை. எனது கதையில் வரும் ஹரியும் ஒரு விசித்திரப் பிறவி. நமது கதாநாயகன் மெக்சிக்கோவில் ஓர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

To cook or not to cook a crab

The hero of this story is a mud crab and the villain is a man who supposedly has all his rational faculties intact. In the market, the mud crab is the largest that is available for consumption. It is packed with sweet … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் !

அஞ்சலிக்குறிப்பு                                                           முருகபூபதி கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால்,                  “ கல்வெட்டு எழுத்தாளன்  “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா – இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள்,  சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த –  புலம்பெயர்ந்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக