கேள்வி– பிரியா ராமநாதன் ( முகநூல் மூலமான கேள்வி- பதில்)

குடும்பம் என்ற அமைப்பு பலமா அல்லது தனிமனித ஆளுமையைப் பலவீனப்படுத்துகிறதா?
வன்முறைகள் ஏற்படுத்தும் களமா?குடும்பம் என்பது திருமணம் என்ற சிறிய வட்டத்தில் அடங்குவதா?
குடும்பம் இல்லாமல் தனியே வாழமுடியுமா
பதில்
குடும்பம் என்பது அரசு, மற்றும் சமூகத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. ஒரு பொருளாதார கட்டமைப்பும் கூட . குடும்பத்திற்கு உழைப்பது, சேமிப்பது என்பதெல்லாம் அரசை வலுப்படுத்தும் என்பதால் இறுதிவரையும் தொடரும்.
95 வீதமானவர்கள் ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்வதென்பது ஒரு உயிரியல் தேவை – அதைத் தவிர்க்க முடியாது – பெண் தொடர்ந்து தனது சமூகத்தில் வகிக்கும்(Care giver) என்பது தொடரும் .
குடும்பமான திருமண உறவு இல்லாத போதும் ஆணின் வன்முறை இருக்கும் – அதற்கு உடல் இரசாயனங்கள், பெற்றோர், சமூகம், தேசம் எனப் பல காரணங்கள் உள்ளன. முன்னேறிய நாடுகளான இங்கும் வன்முறை உள்ளது. ஆனால் பெண்கள் கல்வி, தொழில் , சமூகத்தில் விழிப்புணர்வு , சட்டம் இவற்றைக் குறைக்கும் .
எனது தந்தை எனது அம்மா அடித்ததுள்ளார் அதனால் எனக்குத் தந்தையில் வெறுப்புள்ளது. அம்மா கடைசியாகப் பிறந்த செல்லப்பிள்ளை . எனது தந்தை தாய் தந்தையற்று தமக்கையரால் வளர்க்கப்பட்டவர் . பிரித்தானிய இராணுவத்திலிருந்தவர் . இருவரும் பேசி திருமணம் முடித்தவர்கள்.
பல நெருக்கடிகள் எம்மிடையே வந்தபோதிலும் மனைவி மேல் நான் கை வைத்ததில்லை- காதலித்து திருமணம்- தனிப்பட்ட விடயமென்றாலும் காதல், படிப்பு எல்லாம் எங்களையறியாது வந்துவிடும்.
இலங்கை இந்தியா போன்ற இடங்களில் தனியாகப் பெண் வாழ்வது கடினம் காரணம் பெண்களுக்கு அரச உதவியில்லை. இந்த நாடுகளில் பெண்கள் வேலையில்லாதபோது பண உதவி பெறுவார்கள். வேலை வாய்ப்புடன் கல்வியும் , துணிவும், உள்ள பெண்ணுக்கு இலங்கையில் எதிர்நீச்சல் வாய்ப்புள்ளது. தனித்து நின்று வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
சமூகத்தில் ஆண்பெண் சமமென்ற சிந்தனை வருவதற்கு நமது மதங்கள் மிகவும் எதிரானவை.
கேள்விக்கு பதில் எழுதினேனா தெரியாது.
நன்றி தமிழருவி.
மறுமொழியொன்றை இடுங்கள்