Monthly Archives: மே 2021

அந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு

அசோக்குமார் ஜனார்த்தனன் சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்.

இன்று மே 29 ஆம் திகதி  சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும்                                                                    முருகபூபதி இன்று மே 29 ஆம் திகதி  சண்முகம் சபேசன் நினைவு தினம் அவர் மறைந்த பின்னர் வெளியாகும் இலங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

10.கரையில் மோதும் நினைவலைகள்

வாழ்வின் அர்த்தங்கள். ஒவ்வொரு பரீட்சையும் வாழ்வின் சோதனைகள்தான். இதனாலோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பரீட்சையைச் சோதனை என்பார்கள்.. எடேய் சோதனை எப்படி ? உன்ர சோதனை முடிந்துவிட்டதா? இவள் எங்கே சோதனை பாஸ் பண்ணுவது ? ஒரு  படிமமான ஒரு பெயரை வைத்து அழைத்தார்கள். சுட்டபழம் என்பதுபோல் யாரோ ஆரம்பத்தில் வைத்திருக்கவேண்டும். பத்தாம் தரத்தில் பரீட்சை எடுத்து, … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்.

நடேசன் அவுஸ்திரேலியா தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 2019ம் ஆண்டு மெல்பேன் வந்தபோது எனது சொந்த பிரச்சனையில் சுழன்று திரிந்ததால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. ஒரு நாள் மட்டுமே அவருடன் செலவழித்தேன். மிகவும் யதார்த்தமாகப் பழகும் ஒருவர் அவர். அவருடன் மேலும் சில நாள்கள் பழகவில்லையே என்ற குற்ற உணர்வு இன்றும் என்னைப் புழுவாக … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Veterinary Vignettes -Review from Dr Saman Karasin Arachchi

A few weeks ago, I received a call from Noel, and he asked if I could speak about one of his books “Veterinary Vignettes”.  I said “Yes”, without thinking, too much about it . However, thank you Noel for inviting … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எஸ் பொன்னுத்துரை- ஈழத்து செவ்வியல் எழுத்தர்

‘உங்கள் ஈரல் பல காலம் ஓவர்டைம் செய்த ஈரல்’என்று எஸ்.பொ. மரணிப்பதற்கு சில கிழமைகள் முன்பு அவர் ‘ஈரலில் பிரச்சினை’என்றபோது கூறினேன். ‘அது சரிதான்’ என்று மெதுவான சிரிப்பு தொலைப்பேசியில் கேட்டது. ‘உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ .‘அதுதான் அநுரா பார்க்கிறான்’ ‘அம்மாவாலும் அநுராவாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி. எனது மனைவியின் தமையன். சமீபத்தில் சுவாசப் புற்றுநோயால் இறந்தவர் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

கரையில் மோதும் நினைவலைகள் 9

கல்வியங்காடு அந்தக்காலத்தில்  யாழ்ப்பாணத்தை எங்கள் ஊரில்  பட்டினம் என்பார்கள்எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணப் பட்டினத்திற்கு ஆறு சகோதரங்களாக  குடி பெயர்ந்தோம்.  அந்த எண்ணிக்கை அதிக காலத்திற்கு நீடிக்கவில்லை.                         கல்வியங்காட்டில்     இருந்த சில மாதங்களில் எனது கடைசித் தம்பி   திடீரென   இறந்தான் . அப்போது அவனுக்கு இரண்டு   வயதிற்குச் சில மாதங்கள் அதிகமாக இருக்கும். அவன்  எழுவைதீவில் பிறந்த காலத்தில் நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன்.    அதனால் அவனது குழந்தைப்      பருவம் எனக்கு அதிகம் பரீச்சயமற்றது. வரிசைக் கிரமமாக ஐந்து குழந்தைகளும் தாய்மையை தின்று வளர்ந்ததால்  அம்மாவிடம் அவனுக்குக் கொடுப்பதற்கு அதிகம் மிச்சமிருக்கவில்லை. தகரப் பால் மாவை மட்டும் குடித்தான்.   ஆனால் வளரவில்லை . மற்றைய உணவுகள்  அவனுக்குச்  செரிமானமடையவில்லை . பின்னர் வந்த  பஞ்சகாலத்தில்  தொலைக்காட்சியில் பார்த்த குழந்தைபோல் காட்சியளித்தான்.  இக்காலத்தைப்போல் பல  வியாதிகளுக்கு அக்காலத்தில் பெயரில்லை . அவன்      இரண்டரை வருடங்களில் தனது வாழ்வை முடித்துக்கொண்டான். அவனது பெயர் கமலேசன்.  அவன் பிறந்த பின்பாக  அம்மாவுக்கு  உடல் நலம் குன்றி விட்டது . எழுவைதீவில்                  இருந்தபோது அம்மா தபால் அதிபராக வேலை பார்த்ததால்              பணவிடயத்தில் சுதந்திரம் இருந்தது. குழந்கைளை பார்க்க     பேரன் ,பேத்தி ,  உறவினர் என்று ஆள்  வசதிகள் இருந்தது.             பட்டணம்  பெயர்ந்ததும்   அம்மா நாள்முழுவதும் வீட்டில்  இருந்ததால் அவரது மனநலம் குன்றியிருந்ததா..?             … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

New South Asian advocacy organisation (ASAS)

New South Asian advocacy organisation ‘Australia South Asia Society Inc.’ (ASAS) aims to raise relevant issues with state & federal governments By SAT News Desk  MELBOURNE, 2 May 2021: The Australia South Asia Society Inc. (ASAS) was launched today at … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

குடும்பம்

கேள்வி– பிரியா ராமநாதன் ( முகநூல் மூலமான கேள்வி- பதில்) குடும்பம் என்ற அமைப்பு பலமா அல்லது தனிமனித ஆளுமையைப் பலவீனப்படுத்துகிறதா? வன்முறைகள் ஏற்படுத்தும் களமா?குடும்பம் என்பது திருமணம் என்ற சிறிய வட்டத்தில் அடங்குவதா? குடும்பம் இல்லாமல் தனியே வாழமுடியுமா பதில் குடும்பம் என்பது அரசு,  மற்றும்  சமூகத்திற்கு  பலத்தைக்  கொடுக்கிறது.  ஒரு பொருளாதார கட்டமைப்பும் கூட . குடும்பத்திற்கு உழைப்பது,  சேமிப்பது என்பதெல்லாம் அரசை வலுப்படுத்தும் என்பதால் இறுதிவரையும் தொடரும். 95 வீதமானவர்கள் ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்வதென்பது ஒரு  உயிரியல் தேவை – அதைத் தவிர்க்க முடியாது – பெண் தொடர்ந்து தனது சமூகத்தில் வகிக்கும்(Care giver) என்பது தொடரும் . குடும்பமான திருமண உறவு இல்லாத போதும் ஆணின் வன்முறை இருக்கும் – அதற்கு உடல் இரசாயனங்கள்,   பெற்றோர்,   சமூகம்,  தேசம் எனப் பல காரணங்கள் உள்ளன. முன்னேறிய  நாடுகளான இங்கும் வன்முறை உள்ளது. ஆனால் பெண்கள் கல்வி,  தொழில் ,  சமூகத்தில் விழிப்புணர்வு , சட்டம் இவற்றைக் குறைக்கும் . எனது தந்தை எனது அம்மா அடித்ததுள்ளார்  அதனால் எனக்குத் தந்தையில் வெறுப்புள்ளது. அம்மா கடைசியாகப் பிறந்த செல்லப்பிள்ளை . எனது தந்தை தாய் தந்தையற்று  தமக்கையரால்  வளர்க்கப்பட்டவர் .  பிரித்தானிய இராணுவத்திலிருந்தவர் . இருவரும் பேசி திருமணம்  முடித்தவர்கள். பல நெருக்கடிகள் எம்மிடையே  வந்தபோதிலும் மனைவி மேல் நான் கை வைத்ததில்லை- காதலித்து திருமணம்- தனிப்பட்ட விடயமென்றாலும் காதல்,  படிப்பு  எல்லாம் எங்களையறியாது  வந்துவிடும். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Name of the book: Veterinary Vignettes

   Author: Dr Noel S Nadesan Publisher: Sudarsan Books & Crafts, Tamil Nadu, India; Year 2020 Also published as Amazon Kindle Book (eBook) The author is a professional Vet with a literary mind! A unique combination that opens a window … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக