தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்

நடேசன் எழுவைதீவில் இருந்த காலத்தில் நான் கேட்டு வளர்ந்த பல தமிழ்ச் சொற்களை பின்பு அரைநூற்றாண்டுகளாக நான் கேட்டதில்லை. அதனால் அவை மூளையில் புதைபொருளாகிவிட்டன. தமயந்தி எழுதிய ஏழு கடல்கன்னிகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் அந்த சொற்கள் மீண்டும் எழுந்து வந்தபோது மனம் புல்லரித்தது. மீனவர்கள் மத்தியில் வளர்ந்தேன். சோளகம் , வாடை என்று பருவக்காற்றைச் சொல்வதும், அணியம் – சுக்கான் என மீன் பிடிக்கும் வள்ளங்களின் பாகங்களைக் குறிப்பதும், படுப்புவலை , களங்கண்டி , … தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.