Monthly Archives: ஜூலை 2020

வாழும்சுவடுகள் இரண்டு

அணிந்துரை – கோவை ஞானி ஆஸ்திரேலியாவில் கால்நடை மருத்துவராகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டாக்டர் என்.எஸ் நடேசன் அவர்களை நேரில் நான் அறியவில்லை என்றபோதிலும், அவரது வாழும் சுவடுகள், வண்ணாத்திக்கும் ஆகிய படைப்புகளைப் படித்த நிலையிலும், அவரது படைப்புகளுக்கு திருவாளர்கள் எஸ்பொ- முருகபூபதி-எஸ் ராமகிருஷ்ணன் ஆகியவர்கள் வழங்கியுள்ள அணிந்துரைகளில் இருந்தும் நடேசன் அவர்களை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்

2012 ல் எழுதியது கொஞ்சம் எடிட் பண்ணியது நடேசன் கம்போடியாவில் ரொன்லி சப் என்ற பெரிய ஏரி மீகொங் ஆற்றுடன் தொடர்பான 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அந்த ஏரியை சுற்றியெல்லாம் கோடைகாலத்தி;ல் வயலில் விதைத்து நெற்சாகுபடி செய்யமுடியும். மழைக் காலத்தில் அந்த ஏரி நீர் 13000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதாவது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கோவை ஞானி நினைவுகள்

அஞ்சலிக்குறிப்பு: மனக்கண்ணால் இலக்கியம் பேசியும் எழுதியும் இயங்கிய ஆளுமை ! முருகபூபதி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில் மாலைநேர தனது வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன. இம்மாதம் ( ஜூலை ) முதலாம் திகதிதான் அவர் தமது 85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு, அடுத்த … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அலைந்து திரியும் ஆவிகள்

( சிறுகதை )நடேசன் ஒரு எழுத்தாளனாக இருப்பவன் தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும் மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும். அப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன். கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குத் தனியாகச் சென்றேன். ஹோட்டலில் தங்கி, ஏன் தேவையில்லாமல் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் பாவங்களை கழுவ கடைசி சந்தர்ப்பம்

( 2009ல் எழுதி அஸ்திரேலியா உதயம் பத்திரிகையில் வெளியாகியது) நடேசன் இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தமிழர் பலருக்கு அதிர்ச்சியையும் துக்கத்தையும் கொடுப்பவையாக இருப்பவை. இதன்காரணத்தால் இப்படி விளைவுகளுக்கு யார் மேலாவது பழியை போடவேண்டும் என தேடும் போது பலருக்கு இலங்கையில் தற்போது அரசியல் நடத்தும் மகிந்த இராஜபக்ச அரசாங்கம் கண்முன்பு தெரியும். அதேபோல் சிலர் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இமயத்தின் கோவேறு கழுதைகள்

நடேசன் இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

பஷீர் சேகுதாவூத்

முருகபூபதி – மெல்பன் – அவுஸ்திரேலியா தோழர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் எழுத்துக்களையும் கருத்துக்களையும் அவ்வப்போது படித்து வருகின்றேன். அவருடைய சிந்தனைகளில் மிளிரும் இன நல்லிணக்கம் எவ்வாறு உருவாகுதல் வேண்டும் , இஸ்லாமிய மக்கள் குறித்த சந்தேகங்கள் எவ்வாறு களையப்படல்வேண்டும், தேசத்தின் அபிவிருத்தியில் அனைத்து இனமக்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்ளவேண்டும் முதலான எண்ணங்கள் என்னை பெரிதும் கவர்ந்தவை. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

Racialized bodies in bio-medical settings

By Rajes BalasubramaniamMA Medical Anthropology 1994 The increasing power of bio-medicine has been very little time for a holistic approach in treating people. The development of bio-medicine and the doctors’ relationship with his patients is always the relationship of a … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!

– நடேசன்- “”ஜனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது””? “”எனது மனத்தில் ஓர் ஆறுதல் உணர்வு ஏற்பட்டது. நான் வேலையில் இருந்து களைப்பாக வீடு வந்ததும் அம்மாவிடம் பேசவேண்டும். நாள் முழுவதும் தனியே இருந்த அம்மா நான் வந்ததும் என்னுடன் பேசுவதற்கு வருவார். நான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சலிக்குறிப்பு: Dr இராஜநாயகம் இராஜேந்திரா.

தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம் முருகபூபதி மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக