Monthly Archives: ஜூன் 2020

வண்ணாத்திக்குளம்;யூலைக்கலவரம்

நானும் சித்ராவும் மதவாச்சி வைத்தியசாலைக்கு புதிதாக இடமாற்றமாகி வந்திருந்த கண்ணனை சந்தித்தோம். கண்ணன் என்னுடன் பேராதனை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவன். மதவாச்சியில் உள்ள வைத்தியசாலை சிறியது. ஒரு வைத்தியரை மட்டும் கொண்டுள்ளது. பெரிய நோய்கள் வந்தால் வவனியாவோ அநுராதபுரமோ தான் செல்ல வேண்டி இருக்கும். பல வருடங்களுக்குப் பின்பு சந்தித்தபடியால் ஏராளமான விஷயங்களை பேசினோம். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல-7

கைதிகள் எல்லோரையும் தனித் தனியாக பக்கவாட்டிலும் நேராகவும் புகைப்படம் எடுத்தார்கள். பெயர் என்ன, இயக்கம், கைதி இலக்கம் என்பவற்றை அட்டையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டு புகைப்படம் எடுத்தார்கள். அதே நிலையில் வீடியோ படமும் எடுத்தார்கள். ஒரு கைதியை வீடியோ படம் எடுக்கும் போது அவர் பெயர், இயக்கம், தீய பழக்கங்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள். … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வண்ணாத்திக்குளம்; தலைமறைவு

இரவு ஒன்பது மணிக்கு ரூபவாகினியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தேன். சித்ராவுக்கு செய்திகளில் விருப்பமில்லை. அரசியல்வாதிகளின் முகங்களை சுத்திசுத்தி காட்டுவார்கள். அவர்களை சுற்றியே உலகம் சுழல்வதாக கூறி மக்களை நம்பப்பண்ணும் ஒரு வேலை என்பது அவளது வாதம். குசினிப்பக்கத்தில் பாத்திரங்களை கழுவிக்கொண்டு நின்றவள் பின் கதவால் யாரோ வருவது கண்டு ரி.வி இருந்த கூடத்தை நோக்கி வந்தாள். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மெல்பேனில் ஒரு ” வேங்கைச்செல்வன் “

சபேசன் அண்ணை – எங்கள் எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்தப் பெருமனிதனின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கிறது. தம்பி என்று எப்போதுமே இளையவர்களுடன் பழகும் அந்தப் புன்முறுவல் என்றும் எங்கள் நினைவுகளில் தொடர்ந்திருக்கும். விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் காட்டிய அவரது அளவற்ற பற்றுதல் அபாரமானது. அவருடன் இணைந்து நின்ற செயற்பாட்டாளர்களுடன் அதேயளவு நெருக்கமான மதிப்பை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல-6

கைதிகளுக்கு காலை உணவாக பாண் தரப்படும் என முன்னரே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பாண் கொண்டு வரப்படும் பெட்டிகளில் பேக்கரியின் பெயரும் துணுக்காய் என்று எழுதப்பட்டதையும் பார்த்து இப்பகுதி துணுக்காய்க்கு சமீபத்தில் இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் உதவியாளர் நெல்லிநாதன் என்பவர் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள இக்காட்டு முகாமில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;புல்மோட்டை

புல்மோட்டை கடற்கரை அண்டிய பிரதேசம். இங்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்கிறார்கள். இதற்குப் பக்கத்து சிறு கிராமமான தென்னமரவடி தமிழ்க் கிராமம். இவ்விரு கிராமங்களும் ஆரம்பத்தில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்த இரு கிராமங்களையும் சமீபத்தில் அநுராதபுர மாவட்டத்தோடு இணைத்து விட்டார்கள். இதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இருந்த பூகோளத் தொடர்ச்சியை அறுத்துக் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 5

நான் இக்காட்டுக்குள் அமைந்திருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டாம் நாள் கைதிகளின் கால்களுக்கு தனித்தனியாக விலங்குகள் போடப்பட்டது. அதாவது இரும்புச் சங்கிலியால் இரு கால்களும் பிணைக்கப்பட்டு மின்சார ………….. ஒட்டு மூலம் ஒட்டப்பட்டது. ஒவ்வொரு கைதிக்கும் தனித்தனி இலக்கம் கொடுக்கப்பட்டது. கைதிகள் நூறு நூறு ஆட்களாக பிரிக்கப்பட்டன. …. பிரிவில் நூறு கைதிகள் …….. பிரிவில் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்;பாலில் கலப்படம்

மன்னார் ரோட்டும், யாழ்ப்பாண ரோட்டும்; மதவாச்சியில் ஒன்றாக சந்தித்து கண்டி ரோட்டாக மாறுகிறது. இந்த சந்தியின் இடைவெளியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தைச் சுற்றி கடைத்தெரு உண்டு. இரண்டு உணவுக் கடைகள் இஸ்லாமியரால் நடத்தப்படுகிறது. தமிழர்கள் அரசாங்க வேலை பார்த்து விட்டு வார இறுதியில் காணாமல் போய் விடுவார்கள். மீண்டும் திங்கட் கிழமையில் உயிர்த்தெழுவது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நாம் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட மனநோயாளிகளல்ல- 4

விடிந்தது நான் இருந்த கட்டிடத்தினுள் சுற்றும் முற்றும் பார்த்தேன், சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இருந்தார்கள். எம்முடன் சாவகச்சேரியில் கைதிகளாக இருந்து விடுதலை என்று அழைத்துச் செல்லப்பட்ட எல்லோரும் அங்கு இருந்தார்கள். எல்லோருமே விடுதலை செய்யப்படவில்லை. பல புதிய கைதிகளும் இருந்தார்கள். பல கைதிகள் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்கள். அநேகர் தலை மொட்டை அடிக்கப்பட்டும், கண்ணிமை … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

வண்ணாத்திக்குளம்;தீவுப்பகுதி

சித்ராவுடன் யாழ்ப்பாணம் செல்ல தீர்மானித்தபோது நாங்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது நல்லது என முடிவு செய்தோம். தாயாரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ரயிலில் செல்வது நல்லது என மகளின் காதில் சொல்லப்பட்டது. மோட்டார் சைக்கிளில் போனால் எல்லா இடங்களுக்கும்; போகமுடியும். அத்துடன் இரண்டு நாள்கள் சென்று திரும்ப வேறு வழியில்லை என வாதிட்டபோது தாயும், மகளும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக