Monthly Archives: மே 2020

“ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன்

இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருக்கும் “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் நேசிக்கும் பண்பாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து வந்தபின்னர் எனக்கு அறிமுகமாகி, நான் உறவாடி மகிழ்ந்தவர்களில் கலை, இலக்கியம், கல்வி, ஊடகம் முதலான துறைகளிலும் மற்றும் சமூகப்பணிகளிலும் ஈடுபட்ட பலரைப்பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளேன்.அந்த வரிசையில் தீவிரமான வாசிப்பு பயிற்சியிலிருப்பவர்கள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம்

முன்னுரை எனது எழுத்துலகத்தின் அரிச்சுவடியே இந் நூலில் பதிவாகியுள்ளது. எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேச முடியாத சிறுவனைப் போன்று நானும், எனது வாழ்வில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தேன். அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த காலத்தில் எனது கல்விசார் பட்டம் அங்கீகரிக்கப்படாதமையால் வேலையும் கிடைக்க வில்லை. புலம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் அத்தியாயம் 1

அக்கினி ஞானஸ்ஞானம் By Terrence Anthonipillai ‘எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள். அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.’ முக்கால் மணித்தியாலமாக TRO ரவி தனக்கேயுரிய உரத்த குரலில் எங்களை நோக்கி ‘அன்புடன்’ வேண்டிக்கொண்டிருந்தார். அவரது உதவியாளர் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

விசிலர் , மேற்குக் கனடாவில் சில நாட்கள்

பஸ்ஸில் முப்பதிற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்களுடன் எங்கள் பயணம் ரொக்கி மலையின்மீது தொடங்கியது. பிஜியைச் சேர்ந்த இந்திய இளைஞனே எங்கள் வழிகாட்டி. கேர்ணல் ரம்புக்கா, எண்பதின் இறுதியில் செய்த ஆயுதப் புரட்சி பிஜி இந்தியர்களை வெளித்தள்ளியது. பலர் அவுஸ்திரேலியா, கனடா , இங்கிலாந்து என இலங்கைத் தமிழர்கள்போன்று தப்பியோடினார்கள். கடந்தமுறை இரவில் சென்று பார்க்க முடியாத மலை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நடேசனின் கானல் தேசம்

வாசிப்பு அனுபவம் . வடகோவை வரதராஜன் பாலைவனத்தில் மனோரத்திய உணர்வுகளுடன் சிறப்பாக தொடங்கும் கதை, திகில் நிறைந்த துப்பறியும் நாவல் போல் தொடர்கிறது. போர் நடந்தபோது இலங்கையில் இல்லாத ஒருவர் மிகுந்த உழைப்பைக் கொடுத்தே இப்படியான நாவலை எழுத முடியும் . வன்னியில் நடந்த , மற்றவர் காட்டாத இன்னோர் பக்கத்தை இரத்தமும் சதையுமாக காட்டுகிறது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விக்டோரியா, மேற்குக் கனடாவில் சில நாட்கள்

நடேசன் கனடாவில் வதியும் எனது சகோதரங்களைப் பார்ப்பதற்காக இதுவரையில் மூன்று தடவைகள் குளிர் காலத்தில் சென்று திரும்பியிருக்கின்றேன். விமானம் முதலில் தரிக்கும் நகரமான வன்கூவரில் இறங்காது, மீண்டும் விமானத்திலேயே ரொண்ரோவிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் அதேவழியால் ஆஸ்திரேலியா திரும்பிவிடுவேன். கனடா என்ற பரந்த தேசத்தின் அழகான பகுதி மேற்கில் இருப்பதை அறிவேன். விமானத்திலிருந்து கீழே பார்க்கும்போது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை

PDF Asokanin vaithiyasail

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அசோகனின் வைத்தியசாலை- கலந்துரையாடல்

மே – 10 – ஞாயிறு மாலை இந்திய நேரம் 7 மணிக்குநறுநிழல் ZOOM MEETING ID : 4775896897 –மே – 10 – ஞாயிறு மாலை 7 மணிக்குஇந்திரன் உரை – நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” + புலம்பெயர் எழுத்து பற்றி. கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே.நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை எழுவைத் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

நூதனம் அடங்கிய தொனி

வாழும் சுவடுகள் – நொயல் நடேசன்——————————–>நடேசன் இலங்கை – நபீல் யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத் தீவில் பிறந்தவர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் படித்த பின் சில காலம் இலங்கையில் பணியாற்றினார். இப்போது இருப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். <நடேசனுடைய நான்கு நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. கூடவே பயணக் கட்டுரைகள், கதைகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நேபாள நினைவுகள்: புத்தபெருமான் அவதரித்த லும்பினி

நடேசன் நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது. புத்த மதம் பல காரணங்களால் எனக்கு நெருங்கியது . கட்டளைகளாக எதுவுமில்லாது, ஒழுக்கத்தையும் அறத்தையும் கடமைகளாகக் கொண்டு (சீலம்) மக்கள் வாழவேண்டுமெனச் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக