Monthly Archives: மே 2020

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ;அத்தியாயம் 6

——- எமது வாகன தொடரணி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள்வர இருண்டு விட்டது. வழமை போல் உட்பிரவேசிக்கும் வரிசையில் பதிவுசெய்வதற்க்காக காத்துநின்றேன். எனக்கு முன்னால் நின்ற கிறிஸ்தவ பாதிரியார் தனது முறை வர பதிவு செய்பவரிடம் அடையாள அட்டையைக்கொடுத்து விட்டு அவனின் கேள்விகட்கு பதிலளிக்க ஆரம்பித்தார். ‘ உங்கள் பிரயாணத்தின் நோக்கம்’ ‘தேவ பணி’ என்றார் அந்தப்பாதிரியார். … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்திக்குளம் -மீண்டும் பதவியா

அலுவலகத்தில் அன்று வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்;தேன். ஒரு கடிதம் தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டதாக இருந்ததால் மெனிக்கேயிடம் கொடுத்து வாசிக்கிச்சொன்னேன். மெனிக்கே படித்து விட்டு ‘பதவியா மகாவித்தியாலயத்தில் கால் நடை விவசாயம் பற்றி இம்மாதம் பதினைந்தாம்; திகதி மாணவர்களுக்கிடையில் பேச முடியுமா என பாடசாலை அதிபர் கேட்டிருக்கிறார் ‘ என்றாள். பதவியா மகாவித்தியாலயத்தில்தான் சித்திரா வேலை செய்கிறாள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் –அத்தியாயம் 4

By Terrence Anthonipillai ‘அடோ கொட்டியா கவத ஆவே , போம்ப மொனவத் கெனாவத'( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தழுவினார். ‘ போம்ப நவே அம்ப கெனாவ’ ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நீதிமன்றம்; வண்ணாத்திக்குளம் 4

மேசையில் இருந்த கடிதங்களைத் திறந்தேன். முதலாவதாக இருந்த கடிதம் என்னை நீதிமன்றத்துக்கு வரும்படி அழைக்கும் அழைப்பாணை. வைத்தியர் ஒருவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் ஒன்ற எடுத்து அனுப்ப வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இரண்டாவது முறையாக நீதிமன்றம் செல்லாமல் உடல் நலக்குறைவு என பொய் சான்று அனுப்புவது மனத்தை உறுத்தியது. சுமூகத்தில் சட்டமும் நீதிமன்றங்களும் மதிக்கப்பட … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 3

By Terrence Anthonipillai வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தெகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரபபடுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக்கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்டநாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை ;நொயல் நடேசன்

தனந்தலா.துரை தமிழ் புதினங்கள் வரிசையில் நொயல் நடேசன் அவர்களின் அசோகனின் வைத்தியசாலை நிச்சயமாக தனித்துவம் மிக்கது என்று நான் கருதுகிறேன்..இந்தப் புதினம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள தளம் தமிழுக்கு புதியது என்று நான் கருதக் காரணம் முழு புதினமும் விலங்குகளின் மருத்துவம் மருத்துவம் சார்ந்த விடயங்களாகவே இருக்கின்றன அத்துடன் மனித மனங்களின் நுட்பமான கூறுகள் செல்ல (pet)விலங்குகள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தேவதையின் அறிமுகம்-வண்ணாத்திக்குளம் 3

வெள்ளிக்கிழமையானதால் வேலையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, கந்தோர் மோட்டர் சைக்கிளில் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தேன். தோளில் சாக்கு மூட்டையுடனும், கையில் பையுடனும் எதிரே சுப்பையா வந்து கொண்டிருந்தார். பாரத்தின் சுமை அவரது முகத்தில் தெரிந்தது. ‘எங்கே போகிறீர்கள்? ‘ ‘யாழ்ப்பாணம். ‘ ‘தோளில் என்ன மூட்டை? ‘ ‘எலுமிச்சம்பழம். வீட்டை கொண்டு போகிறேன். ‘ … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்- அத்தியாயம் 2

By Terrence Anthonipillai வன்னி முழுவதும் கோவில் திருவிழா போல் காட்சியளித்தது. திரும்பிய இடமெல்லாம் சனத்திரள். மிருகங்கள் வாழும் காடுகளையும் சனம் விட்டு வைக்கவில்லை. கடந்த நாலைந்து நாட்களாக வந்திறங்கிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களையே பராமரிக்க வன்னி தடுமாறிக்கொண்டிருக்கும்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கிளாலியூடாக வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள். கடற்கரையிலிருந்து கிளிநொச்சி நகருக்கான போக்குவரத்து ஒழுங்குகளை தமிழர் புனர்வாழ்வுக் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பிரேதப் பரிசோதனை- வண்ணாத்திக்குளம்- 2

பிரேதப் பரிசோதனை எல்லோரும் போனபின் நான் மட்டும் தனியாக இருந்து கோப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தேன். என்னுடன் வேலை செய்பவர்களின் பேர்சனல் கோப்புகளை அவர்கள் இருக்கும் போது பார்ப்பது நாகரீகம் இல்லை என்பது என் நினைப்பு. ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. கோப்புகளை அலமாரியுள்ளே வைத்து பூட்டி விட்டு நாற்காலியில் வந்தமர்ந்து எனது இரண்டாம் நாள் வேலையை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு புலியின் கதை

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட தினம் ( 19-05-2009 ) இன்றாகும் ! ( இக்கட்டுரையை டி . பி.எஸ் .ஜெயராஜ் பைனான்சியல் டைம்ஸ் இல் எழுதியுள்ளார் ) விடுதலைப்புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 11 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை ஆயுதப் படைகளுடன் போராடி 19 மே 2009 அன்று கொல்லப்பட்டார். வடஇலங்கையின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக