முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 10


மீண்டும் ஓர் கூட்டம்.

ஆனால் இது சற்றுவித்தியாசமானது.

ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலரா ஒட்டுண்ணு
3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும் சகல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினுடனானஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றிய சகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள்.
ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை.

இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!)

ஆரம்பத்தில் சிறுவர் பாதுகாப்புநிதிய இங்கிலாந்துப் பிரதிநிதிவன்னியில் சிறுவர்களின் அப்போதைய நிலைமைகளை எடுத்துக்கூறினார். குறிப்பாக சிறுவர்கள் வலுக்கட்டாயமாகபடையணியில் சேர்க்கப்படுவதையும் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டிருப்பதை கோடிட்டுக் காட்டினார். அதன் பின்னர் திரு. ஓலராஒட்டுண்ணு அவர்கள் தனது விஜயத்தின் நோக்கத்தையும் அதன்போதுதான் அறிந்தவற்றையும் கூறிவிட்டு’நாட்டில் சமாதானம் ஏற்படவாய்ப்புகள் உள்ளதா’எனபொதுவானகேள்வியொன்றைத் தொடுத்தார்.


கருத்துக் கூறிய அனைவருமே பிராபாகரன் இருக்கும்வரை அது சாத்தியம் இல்லையென்ற எண்ணத்தையே முன்வைத்தனர். பிரபாகரனால் சுதந்திரமாக நடமாடமுடியாது.அதனால் அவர் தொடர்ந்து சண்டை பிடித்துக்கொண்டேயிருப்பார் என்று தமது எண்ணத்துக்கான காரணத்தையும் அவர்கள் கூறினர். நான் எவ்வித பேச்சு மூச்சுமின்றி கம்மென்று இருந்தேன்.

எனக்குஒருவிதத்தில் மனத்திருப்தி. இவ்வளவு வெளிநாட்டவரும் என் முன்னால் பிரபாகரனைப்பற்றி எவ்வித ஒளிவு மறைவின்றி கூறுவது அவர்கள் என்மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் எடுத்துக்காட்டுவதாகவே நான் கருதினேன்.
இவர்களது கருத்துக்களை கூர்ந்து செவிமடுத்துக்கொணடு இருந்த “Do you got anything to say about this” என்று எதிர்பாராவிதமாக என்னை நோக்கிக் கேட்டார்.

எனக்குத் தெரியும் இது நடக்குமென்று. இதற்கு முன்னரும் பல கூட்டங்களில் இது போன்ற இக்கட்டுக்களைசந்தித்துள்ளேன். எனவேதான் மற்றவர்கள் கதைக்கும் பொழுதுஎன்னை நானே தயார் படுத்திக்கொண்டிருந்தேன்.
‘அரசியலில் என்ன நடக்குமென எதிர்வுகூறுவ துகடினம் என்பதைநீங்கள் நன்குஅறிவீர்கள்தானே…’எனநான் ஆரம்பிக்கஅவர் புன்முறுவலுடன்

மேலும் கீழுமாகமெதுவாக தலையசைத்தார். ‘ஏனையோர் கூறியகருத்துடன் முரண்பட என்னிடம் எவ்விதகாரணங்களும் இல்லை’எனத்தொடர்ந்து’ஆனால் தற்போதையஅரசு (சந்திரிக்காஅம்மையாரின்) சமர்ப்பித்திருக்கும் தீர்வுத்திட்டத்தை சரிவரகையாண்டால் இக்கொடியயுத்தத்தில் சிக்கியிருக்கும் சிறுவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமென்பதில் எனக்குஎவ்விதசந்தேகமும் இல்லை’எனபட்டும்படாமலும் கூறினேன். இம்முறை அங்கிருந்தஅநேகர் மேலும்கீழுமாகதலையாட்டுவதுபோல் எனக்குப்பட்டது.
கூட்டம் முடிவுற்றபின்னர் இரவுஉணவு பரிமாறப்பட்டது. இக்கூட்டத்திற்கென பல நிறுவனங்களின் வதிவிடபிரதிநிகள் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்கு குறுகிய நேரத்தில் வன்னியில் இடம்பெறும் பலவிடயங்களை அறிந்து கொள்ள ஆவல்.
இன்னோர் நிறுவனத்தின் வதிவிடபிரதிநிதி என்னைத் தேடிவந்துதானாகவே உரையாடலைத் தொடங்கினார். பலவிடயங்கள் குறித்துகதைத்தோம். வேறும் சிலரும் எம்முடன் இணைந்துகொண்டனர்.
இறுதியில்; விடைபெறும் பொழுதுஒருவெளிநாட்டுநிறுவனத்தின் பிரதிநிதிஎன்னிடம் வந்து’உமக்குஎப்போதாவதுவன்னியைவிட்டுவெளியேறவேண்டுமெனதோன்றினால் என்னுடன் தொடர்பு கொள்ளவும்’எனக்கூறி தனதுவிசிட்டிங்காட்டைத் தந்தார். நன்றி கூறி அதை வாங்கி எனது சேர்ட் பொக்கட்டில் மிகப் பத்திரமாக வைத்துக்கொண்டேன்.
தொடரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: