தனந்தலா.துரை
தமிழ் புதினங்கள் வரிசையில் நொயல் நடேசன் அவர்களின் அசோகனின் வைத்தியசாலை நிச்சயமாக தனித்துவம் மிக்கது என்று நான் கருதுகிறேன்..இந்தப் புதினம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள தளம் தமிழுக்கு புதியது என்று நான் கருதக் காரணம் முழு புதினமும் விலங்குகளின் மருத்துவம் மருத்துவம் சார்ந்த விடயங்களாகவே இருக்கின்றன அத்துடன் மனித மனங்களின் நுட்பமான கூறுகள் செல்ல (pet)விலங்குகள் வளர்ப்பு அது சார்ந்த நுட்பமான விஷயங்கள் ஆகியவை மிகவும் அழகாகவும் அதனோடு இணைந்த மனித மனத்தின் கூறுகள் நுட்பமாக கதையில் கடத்திச் செல்லும் புதினமாக இது இருக்கிறது..
புலம்பெயர் தமிழர்களின் கொடை என்று இதை நான் குறிப்பிட விரும்புகிறேன். புலம்பெயர் தமிழர்களின் புதிய வாழ்விட சிக்கல் , மனவியல் சிரமங்கள்,பண்பாட்டு சிரமங்கள் ஆகியவை மிக நுட்பமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்தப் புதினத்தை புலம்பெயர் தமிழர் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் வாழ்வியல் முறைகளும் கதையின் ஊடே சொல்லப்பட்டிருக்கின்றது…
எழுத்தும் நடையும் சரளமாகவும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாகவும் கையாண்டிருப்பது மிகுந்த திறமைக்கு சான்றாக விளங்குவதாக நான் கருதுகிறேன்.
மறுமொழியொன்றை இடுங்கள்