
வடகோவை வரதராஜன்
பாலைவனத்தில் மனோரத்திய உணர்வுகளுடன் சிறப்பாக தொடங்கும் கதை, திகில் நிறைந்த துப்பறியும் நாவல் போல் தொடர்கிறது.
போர் நடந்தபோது இலங்கையில் இல்லாத ஒருவர் மிகுந்த உழைப்பைக் கொடுத்தே இப்படியான நாவலை எழுத முடியும் .
வன்னியில் நடந்த , மற்றவர் காட்டாத இன்னோர் பக்கத்தை இரத்தமும் சதையுமாக காட்டுகிறது இந்நாவல் .
இலங்கைத் தமிழர்கள் உணர்வுகளை பேச்சு மொழியூடாக காட்டுவதில்லை உடல் மொழியூடாகவே காட்டுவார்கள் எனக் குறிப்பிடும் ஆசிரியர், அசோகன் ,பெரியம்மா , கார்த்திகா ஆகியோர் சந்திக்கும் உணர்ச்சிமிக்க தரணத்தில் பேச்சுமொழி சினிமாத்தனமா வருவதுபோல் உள்ளது .
இந்நாவலில் உள்ள இன்னோர் சிறப்பம்சம் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் சிலர் விடுதலைப் புலிகளோடு தொடர்பு பட்டிருப்பதை காட்டுவது . இதை வேறு ஒரு நாவலாசிரியரும் குறிப்பிடவில்லை என்றே கருதுகிறேன்.
இதில் வரும் பாட்டி character ஒரு வித்தியாசமான character .
நாவலின் மைய சரட்டை இதுவே அமானுசமாக நகர்த்துகிறது .
இறுதியில் ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்தல் படு thrilling.
மொத்தத்தில் இரசனக்குரிய படிக்கவேண்டிய நாவல் .
மறுமொழியொன்றை இடுங்கள்