
மே – 10 – ஞாயிறு மாலை இந்திய நேரம் 7 மணிக்கு
நறுநிழல் ZOOM MEETING ID : 4775896897 –
மே – 10 – ஞாயிறு மாலை 7 மணிக்கு
இந்திரன் உரை – நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” + புலம்பெயர் எழுத்து பற்றி. கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை எழுவைத் தீவிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர். இவர் நான்கு நாவல்களையும் பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.இவர் எழுதிய நாவலை முன் வைத்து இந்திரன் பேசும் நிகழ்வில் புலம்பெயர் எழுத்து பற்றியும் உரையாட நண்பர் ராதாகிருஷ்ணன், செஞ்சி தமிழினியன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் எழுத்தாளர்.
“அசோகனின் வைத்தியசாலை- கலந்துரையாடல்” அதற்கு 2 மறுமொழிகள்
நடேசனின் அசோக வைத்தியசாலை பற்றிய கலந்துரையாடல்
தமிழ் புதினங்கள் வரிசையில் நொயல் நடேசன் அவர்களின் அசோகனின் வைத்தியசாலை நிச்சயமாக தனித்துவம் மிக்கது என்று நான் கருதுகிறேன்..இந்தப் புதினம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள தளம் தமிழுக்கு புதியது என்று நான் கருதக் காரணம் முழு புதினமும் விலங்குகளின் மருத்துவம் மருத்துவம் சார்ந்த விடயங்களாகவே இருக்கின்றன அத்துடன் மனித மனங்களின் நுட்பமான கூறுகள் செல்ல (pet)விலங்குகள் வளர்ப்பு அது சார்ந்த நுட்பமான விஷயங்கள் ஆகியவை மிகவும் அழகாகவும் அதனோடு இணைந்த மனித மனத்தின் கூறுகள் நுட்பமாக கதையில் கடத்திச் செல்லும் புதினமாக இது இருக்கிறது.. புலம்பெயர் தமிழர்களின் கொடை என்று இதை நான் குறிப்பிட விரும்புகிறேன். புலம்பெயர் தமிழர்களின் புதிய வாழ்விட சிக்கல் , மனவியல் சிரமங்கள்,பண்பாட்டு சிரமங்கள் ஆகியவை மிக நுட்பமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்தப் புதினத்தை புலம்பெயர் தமிழர் மற்றும் ஆஸ்திரேலிய மக்களின் வாழ்வியல் முறைகளும் கதையின் ஊடே சொல்லப்பட்டிருக்கின்றது… எழுத்தும் நடையும் சரளமாகவும் சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாகவும் கையாண்டிருப்பது மிகுந்த திறமைக்கு சான்றாக விளங்குவதாக நான் கருதுகிறேன்… நன்றி…