வாழும் சுவடுகள் – நொயல் நடேசன்
——————————–>நடேசன் இலங்கை –
நபீல்
யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் எழுவைத் தீவில் பிறந்தவர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் படித்த பின் சில காலம் இலங்கையில் பணியாற்றினார்.
இப்போது இருப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார்.
<நடேசனுடைய நான்கு நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. கூடவே பயணக் கட்டுரைகள், கதைகள் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்.அங்கு உதயம் என்ற பத்திரிகையை மிக்க துணிச்சலோடு வெளியிட்டிருக்கிறார்.
உண்மையில் ஒய்வு நேரத்தில் படிப்பதற்கான மிக மிகப் பொருத்தமான எளிமையும் ஈர்ப்புமிக்க இலக்கியப் பகிர்வாக இந்த 'வாழும் சுவடுகள்' என்ற நூலைக் கூறலாம்.
இயல்பான மனிதர்களின் வாழ்வை அதன் இயல்பிலேயே எழுதுவது என்பதே நேர்மையும் நீட்சியுமாகும்; அதுபோல் மிருகங்கள், பறவைகள் என்ற எளிய உயிர்களை மனிதர்கள் எவ்வாறு மலினமாக நினைக்கிறார்கள் என்பதை அதன் வாழ்வியலோடு கலந்து பேசுகிறார் நடேசன்.
ஒரு மிருகக் காட்சியகத்தில் அசாதாரணமான சூழலைத் தவிர்த்து மிருகங்களும் பறவைகளும் மானுட வாசனை கலந்து உறவாடும் அரியதொரு படைப்புச் செயற்பாடே இங்கு நிகழ்கிறது.
மனிதர்கள் தவிர்ந்த மிருகங்களின் அன்றாட நாழிகையில் நடந்தேறும் விபத்துகள், நோய்கள் அவைகளை மனிதாபியாக நடந்துகொள்ளும் உள்வாங்கும் உணர்வு, பரிதாபம் என்பன தவிர வீணான ஒரு வரியையும் பராக்கையும் இதிலவர் எழுதியதில்லை.
நடுத்தெருவில் வாகனமொன்றில் சிக்கிக்கொண்ட ஒரு நாய்க் குட்டிக்கான உயிர் மீட்புப் போராட்டம் அசையும் இதயத்தின் படபடப்பு எனனமாய்த்தான் கேட்கிறது.
ஒவ்வொரு சம்பவங்களிலும் வாய் பேசாப் பிராணிகள் கூடவிருக்கும் உறவும் நெருக்கமும் நடேசனின் உண்மையான பரிவுகளை ஒப்புவிக்கின்றன. இவ் 'வாழும் சுவடுகளுடனான அவரின் நூதனம் அடங்கிய தொனி கை வைத்த ஐம்பத்தியாறு அனுபவங்களிலும் வித்தியாசம் என்று தன்னை நிறுவிக் கொள்கிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்