Month: ஏப்ரல் 2020
-
கானல்தேசம்
Safeer Hafiz நொயல் நடேசனின் எழுத்துகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை. அவர் கடைசியாக எழுதிய நாவலே நான் படித்த அவரின் முதலாவது நாவல். கானல் தேசம். படித்து முடிந்த பின் விமர்சனமொன்றை எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடங்கினேன். ஆனால், இப்படியொரு நாவலுக்கு விமர்சனம் எழுத எனக்கு இன்னும் இலக்கிய முதிர்ச்சி தேவை. அதனால், விமர்சனமாக அல்லாமல், நாவலைப் படித்த எனது அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதே பொருத்தம். நானூறு பக்க நாவலொன்றை இரண்டே நாட்களில் […]
-
கலைஞர் ஏ. ரகுநாதன் மறைந்தார்
அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து தமிழ்த்திரைப்படங்களின் வளர்ச்சியின் ஊடாக ஒரு நினைவுப்பகிர்வு முருகபூபதி இலங்கையின் மூத்த தமிழ் நாடக, திரைப்படக்கலைஞர் ஏ.ரகுநாதன் பிரான்ஸில் மறைந்தார் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.சமீபகாலமாக உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்கு புலப்படாத எதிரி, எங்கள் தேசத்தின் கலைஞனையும் புலத்தில் காவுகொண்டுவிட்டது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரிஸ் சென்றபோது, அங்கிருக்கும் நண்பர் எழுத்தாளர் ‘ ஓசை ‘ மனோகரனுடன் ரகுநாதனைப் பார்க்கச்சென்றேன். பாரிஸிலும் வைரஸின் தாக்கம் உக்கிரமடைந்தபோது, அங்கிருக்கும் கலை, இலக்கிய […]
-
சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை
நடேசன் 19 ஆம் நூற்றாண்டில் வந்த சிறந்த நாவல்களான மேடம் பாவாரி – அனா கரினினா இரண்டிலும் திருமண பந்தத்திற்கு அப்பால் உடலுறலில் ஈடுபட்ட பெண்கள் நாவலாசிரியர்களால் கொலை செய்யப்படுகிறார்கள் . ஒரு இடத்தில் ஆசனிக் கொடுக்கப்படுகிறது . மற்றயதில் ரயிலின் முன் தள்ளப்படுகிறாள் . தி.ஜானகிராமன் தனது மோக முள் நாவலில் வரும் நாயகன் பாபுவுடன் ஆரம்பத்தில் உடலுறவு கொண்ட பெண்ணை நதியில் தள்ளி கொலை செய்துவிட்டு மிகுதித் கதையைத் தொடர்கிறார் . இவர்கள் மூவரும் […]
-
இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை
/>திரும்பிப்பார்க்கின்றேன் – முருகபூபதி யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது. அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது, அவர் மல்லிகை […]
-
“ஏமாற்றத்துடன் விடைபெற்றிருக்கும் செங்கை ஆழியான் “
தகவலை பதிவுசெய்கிறது யாழ்ப்பாணம் ஜீவநதி மறைந்தவரிடத்தில் மறைந்தவர் தேடும் ஈழத்து நாவல்க ள் தாயகம் கடந்தும் வாழும் படைப்பாளி செங்கை ஆழியான் முருகபூபதி” தொகுப்புகள் பெறுமதிவாய்ந்தவை என்பதை யாவரும் ஒப்புக்கொள்கிறார்கள். சற்றுநேரம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு தொகுப்பிற்குப் பலமணிநேரத்தை செலவிடவில்லை. வருடக்கணக்கில் செலவிட்டம். உதாரணமாக பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகளைத் தேடிப்பெற்று அதனைப்பிரதி எடுத்து அவற்றில் சிறந்ததை தெரிவுசெய்து பின்னர், பதிப்பித்தல், பதிப்புச்செலவு, அதனை விற்பனை செய்தல், களஞ்சியப்படுத்தல் அப்படிப்பல இடர்களைக் கூறலாம். குடும்பத்தில் பிள்ளைகள், ஏன் நான் […]
-
சித்துவான் தேசிய வனம் – நேபாளம்
நடேசன் அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது. மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை […]
-
Oxford அகராதியில் இந்திய மொழிகளின் சேர்க்கை
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் வியாபாரம் செய்வதற்காக இந்தியா என்ற பெரும் கண்டத்துள் கால் பதித்த ஆங்கிலேயர் பின் இந்தியாவையே ஆண்ட கதை நாம் யாவரும் அறிந்ததே. அவ்வாறு வந்தவர்கள் இந்திய கலாசாரத்திலும் மோகம் கொண்டனர். கிழக்கிந்திய கொம்பனியர் பலர் இந்தியர் போலவே உடையணிந்தும் மகிழ்ந்தனர். சூரியன் அஸ்தனமாகாத பிரித்தானிய அரசை ஆண்ட விக்டோரியா மகாராணியார் அத்துடன் திருப்திப்படவில்லை. அவர் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சக்கரவர்த்தினி என தனக்கு பட்டமும் சூட்டிக்கொண்டார். அவர் தலையில் அணிந்து கொள்ளும் […]
-
கும்ப ஈஸ்வரரும் தேவியின் அருவியும்
நிலத்திற்குக் கீழ் ஒரு குகையில் கும்ப ஈஸ்வரரை ( சிவன்- Gupteshwor Mahadev Cave ) வைத்திருக்கிறார்கள். அங்கு ஈரமான படிகளில் கீழ்நோக்கி குகைக்குள் செல்லவேண்டும். பல இடங்களில் குனிந்தபடி செல்லவேண்டும். சில இடத்தில் கடினமாக இருந்தது. தவழ்ந்து செல்லவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் பக்தியுடன் செல்கிறார்கள் . மனைவி கூட ஆங்காங்கு புத்த விகாரைகளிலும் ஆலயங்களிலும் வணங்கி வணங்கி புண்ணியத்தைச் சேமித்துள்ளார் . நான் மட்டும் உல்லாசப்பிரயாணியாகச் செல்வதால் நம்மீது கும்ப ஈஸ்வரர் ஏதாவது கல்லையோ பாறையையோ […]
-
>புக்காரா நகரம்
நடேசன் நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம். நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம். நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில் […]
-
பூமி வெப்பம் அடைவதால் ஏற்படும் விபரீதங்கள்
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் பூமியின் அதி கூடிய வெப்பநிலையே சீரற்ற காலநிலைக்கு காரணம் எனக்கூறப்படுகின்றது. இயற்கையோ எமக்குப் போதிய அளவு கொடுத்தவண்ணமே உள்ளது. பேராசை கொண்ட மனிதனோ இயற்கையின் வளத்தை சீராகப் பயன்படுத்தாது இயற்கையை சீரழிப்பதே இதற்குக் காரணம். அபரிதமான உற்பத்தியே இன்றைய எமது பெரும் பிரச்சனை. 70பதுகளில் நான் படித்த நூல் ஒன்று இப்பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்துள்ளது. அதன் பெயர் Small is Beautiful இதை எழுதியவர் Trever Link இவர் ஒரு பிரபலமான […]