

காட்மாண்டு பள்ளத்தாக்கில் மூன்று அரசுகள் இருந்தன அவற்றில் ஒன்று இருந்த இடம் பார்டன் என்னும் நகரம். இதுவே நேபாளத்தில் பழமையான நகரம்.நாங்கள் இருந்த இடத்திலிருந்து காட்மாண்டு போக்குவரத்து நெருசலுடாக ஒரு மணி நேரப் பிரயாணமாக இருந்தது. அத்துடன் சிற்ப சித்திர மற்றும் கட்டிடக் கலைஞர்கள் இருப்பதால் அந்த இடத்தை லலிதப்பூர் என்கிறார்கள். இங்கு உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டாலும் 6ம் நூற்றாண்டில் இருந்து வணக்கத்தலங்கள் கோவில்கள் எல்லாம் தொடர்ச்சியாக வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. மல்லா ராஜவம்சமே இங்கு அமைத்தது. அரசமாளிகை, கோயில்கள், பகோடாக்ள், மற்றும் அரண்மனைக் குளிப்பகங்கள் எல்லாம் சேர்ந்து தர்பார் சதுக்கம் எனப்படும் இதுவும் யுனெஸ்கோவால் முக்கிய இடமாகப் பாதுகாக்கப்படுகிறது.


இங்கு பெண் தெய்வதத்திற்கான கோயில், தர்பார் சதுக்கத்தில் உள்ளது. புத்தரின் கட்டளையில் உருவாக்கப்பட்டதாக தொன்மக்கதை கதை உள்ளது அது விசேடமாகக் குழந்தைகளுக்கு வரும் நியுமோனியா எனப்படும் சுவாச நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு மன்னன் அசோகன் தனது மகளான சாருமதியுடன் வந்து பல ஸ்தூபிகளைக் கட்டியதாக கதையுள்ளது. அரசர்களது மாளிகைகளைச் சுற்றிப் பல புத்த, இந்து தேவாலயங்கள் உள்ளது . மகாபாரத பீமனுக்கு இங்கு கோயில் உள்ளது. கங்கைக்கும் யமுனைக்கும் அவர்களது வாகனங்களுடன் சிலைகளை அமைத்துள்ளார்கள்.
2015 ஆண்டு நடந்த பூகம்பத்தில் பல கட்டிடங்கள் இடிந்துவிட்டது . தற்போது கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்