சிட்னியின் மேற்குப் பல்கலைக்கழகம்
–
தொழிலாளர் நிலையில் இருந்து விஞ்ஞான ஆய்வாளன் என தொழில் கிடைத்தபோது ஆரம்பத்தில் ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்டது . எந்த ஒரு வழிமுறையும் இல்லாது , என்னிடம் பொதுமக்கள் நலம் சம்பந்தமான ஒரு புறொயெக்ட் தரப்பட்டது .
சிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி போசாக்குள்ளது. இந்த திரவக் கழிவு நீர் கடலில் கலக்கும் இடத்தில் கடல்பாசிகள் பெருகிவிடும். இந்தபாசிகளால்; கடற்கரைக்கு நீந்திக் குளிக்கவரும் உல்லாச பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகிறது. இந்தக்கழிவு நீரை கடலில் விடாது மீண்டும் வாழைத் தோட்டங்களுக்கு பீச்சி அடித்து பசளையாக்குவது விவசாயத்துக்குப் பயனுள்ளது.. இந்தக்கழிவு நீரினால் ஏற்படும் மொத்தமான பாதிப்பு பற்றி ஆராய்ச்சி செய்வது எனது பொறுப்பு. இதில் வாழைமரங்களில் ஏதாவது தொற்றுகிருமிகள் செல்கிறதா. இதில் இந்த மனிதருக்கு கடத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி தரவுகளுடன் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். வாழைமரத்தின் பகுதிகள் வாரத்தில் ஒருநாள் குளிர்பதனப் பெட்டியில் எனக்கு வந்து சேரும். இந்த பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களை அறிவதே தற்போதைய ஆராய்வாக அமைந்தது.
சிட்னியின் மேற்க்குப்புறத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு செல்வதற்கு அதிகாலையில் செல்லவேண்டும் அதற்காக முதன் முறைகாக ஒரு கார் வேண்டுவதற்கு எனது நண்பன் பாஸ்கரனுடன் சென்றேன் அக்காலத்தில் சிட்னி பரமற்றா ரோட் எனும் தெருவே மேற்கப்புறத்திற்க்கு செல்லும் முக்கியமானது பாதை .இப்பொழுது நெடும் சாலைகள் எனப்படும் பிரிவேக்கள் வந்ததால் முக்கியத்துவம் குறைந்துவிட்டது அந்த தெருவிலே அதிகமான கார்களை விற்கும் கடைகள் உள்ளது.
முதல் முறையாக கார் வாங்கிய போதிலும் அதிகம் யோசிக்கவில்லை. இது நல்லது என்று பாஸ்கரன் காட்டிய கொண்டா சிவிக் என்ற இரண்டாம் தரமான காரொன்றை (வெள்ளை ஸ்ரேசன் வாகன்) வாங்கினேன் . அந்தக் காருக்கான பணம் முழுவதும் எனது மூன்று மாத பெயிண்ட பக்டரி வேலையில் வந்தது. வேர்வை சிந்திய உழைக்கவில்லை என்று சொன்னாலும் இரசாயனத் திரவியங்களை சுவாசித்து வந்த பணம் . பிற்காலத்தில் பலமடங்கு தேடிய பணத்திலும் அந்த மூன்று மாதங்கள் உழைத்த பணத்திற்கு அதிக பெறுமதியுண்டு.
பல்கலைக்கழகத்தில் வேலை செய்வது வித்தியாசமான அனுபவம் எவரும் என்னைக் கேட்பதில்லை . மாதமொருமுறை முடிவுகளைக் கொடுக்கவேண்டும்.
எனது ஆய்வில் முக்கிய நோக்கமாக வாழைப்பழத்திலோ அல்லது இலைகளிலோ தைபோயிட்டை உருவாக்கும் சல்மனெல்லா என்ற பக்டிரீரியா உள்ளதா எண்ணிப் பார்பதும் அவற்றோடு மனித மலத்திற்க்குரிய குறியீடாக பார்க்கும ஈகோலை பக்டீரியாக்களையும் எண்ணவேண்டும் . அவைகளின் தொகையை சிட்னியின் முக்கிய சந்தையான பிளமிங்ரன் சந்தையில் உள்ள வாழைப்பழங்களில் உள்ளவையோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
.
1989 மார்கழி மாத இறுதியில் எனது பத்துமாத ஆய்வில் மனிதக்கழிவில் விளைந்த வாழைப்பழங்களிலோ பிளமிங்டன் சந்தையில் வாங்கிய பழங்களிலோ எந்த ஒரு சல்மனெல்லாவையும் பார்கவில்லை என்பதுடன் மலத்தில் காணப்படும் ஈகோலாய் எனப்படும் பக்டீரியா , பிளமிங்டன் சந்தையில் பழத்தின் அதிகமானது என்பதேயாகும்.
.
இந்தக் காலத்திலே எனது முதலாவது கட்டுரையை நண்பர் முருகபூபதி நடத்திய மக்கள் குரல் என்ற கையெழுத்துப்பத்திரிகைக்காக – அதுவும் எதைப்பற்றித் தெரியுமா?
இந்தியராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த மிகச் சிலரில் நான் ஒருவன் இந்தியாவையாவின் ஒருமைப்பாடு எதிர்காலத்தில் மதத்தாலோ மொழியாலோ அல்லது கலாச்சரத்தாலோ காக்கப்படாது தேசிய முதலாளிகளால் மட்டுமே காப்பாற்றப்படும் என எழுதினேன் .காஸ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையுமுள்ள நுகர்வோரை எந்த முதலாளியும் தவற விடமாட்டான். ஒரு நாட்டில் தேசிய முதலாளித்தும் தன்னைமட்டுமல்ல நுகர்வோரையும் ஒன்றாக வைத்திருக்க வித்தியாசமான வடிவங்களை எடுக்கும் . தற்போது கூட காங்கிரசால் உருவாக்கப்பட்ட இந்த வர்க்கத்தை தன்னுடன் வைத்திருக்க தவறிவிட்டதால் அது இப்பொழுது வேறு கட்சியை ஆதரிக்கிறது
இந்த ஆய்வு செய்த காலத்தில் எனது மிருக வைத்தியத்திற்கான ஒரு பகுதி பரீட்சையை ப் படித்து பாஸ்பண்ணிருந்தேன். மேலும் எனது ஆய்வு முடிந்தவிடுகிறது அதன் பின்பு வேலை இல்லை இதனால் பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.
ஒரு நாள் அஸ்திரேலிய அரசின் பிரதான விஞ்ஞானப் நிறுவனத்தில் இருந்து நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள் அதில் ஆய்வு செய்தபடி எனக்கு பிஎச் டி பட்டத்திற்கான படிப்பை தொடவேண்டும். பணந்தந்து படிக்கசொல்லும்போது கசக்குமா ?
நானும் கோட்டு , ரை எல்லாம் அணிந்து கொண்டு நேர்முகத்திற்கு போனேன் . அங்கிருந்துவர்களில் பிரதான விஞ்ஞானி இந்தியர் உருவம் கொண்டவர் .மற்றவர் மற்றய இருவர் ஐரோப்பிய அஸ்திரேலியர்கள். என்னைிடம் சில கேள்வி கேட்டு விட்டு நீரே இதற்கு சரியானவர் உங்களுக்கு கடிதம் வருமென்றனர். நம்பிக்கையுடன் இருந்தேன் . இரண்டு வாரங்களாக வரவில்லை.
என்னிடமிருந்த தொலைபேசியில் அந்த இந்திய விஞ்ஞானியிடம் விசாரித்தபோது அவர் சொன்னார்.
உமது பல்கலைக்கழக பொஸ் ஏற்கனவே மிருக வைத்திய பரீட்ச்சை பாஸ்பணணிவிட்டீர் என்று அதனால் எமது வேலைக்கு வரமாட்டீர் என நினைத்து வேறு ஒருவரை தெரிவு செய்கிறோம்
எனது சப்த நாடிகள் அடங்கிவிட்டது அவருக்கு பதில் சொல்லாமல் தொலைபேசியை வைத்தேன் .
எனது புறொயெக்ட் மேலாளரான பேராசிரியர் பாமரை போய்சந்தித்து என்ன நடந்தது என்றேன்.
“உம்மை பற்றி நன்றாகச் சொன்னேன் . ஆய்வு வேலைகளை செய்தபடியே மிருக வைத்திய பரிட்சையும் பாசாகினீர் எனஉம்மைப்பற்றி சொன்னேன். “
எனது புளியங்கூடலைச் சேர்ந்த நண்பன் சிறு வயதில் சொன்னதுபோல் அப்பாவியாகச் சொன்னார்
அப்பொழுது தான் எனக்கு புரிந்தது என்னை பற்றி நன்றாக சொல்ல நினைத்து சொல்லிய விடயம் எனக்கு கிடைக்கவிருந்த வேலை ஸ்கொலசிப் -பிஎச் டி – டாகடர் பட்டம் எல்லாம் காற்றில் பறந்தது .
மீண்டும் நத்தார் விடுமுறைகாலங்களில் வேயைற்றவனாகினேன். நத்தார் விடுமுறைகாலங்கள் என்னளவில் கொடுமையானவை . அவுஸ்திரேலியாவில் கொணடாட்டகாலங்கள். அக்காலத்திலே மட்டும் வருட விற்பனையில் 70 வீதமான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையாகும் மிகவும் பெரிய விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்ல பெற்றோரையும் கவரும் அந்தக்காலத்தில் வறுமையாக இருப்பது மற்றக்காலங்களிலும் கொடுமையானது ஏதாவது தொலைபேசியைப் பார்த்து காலம் தள்ளுவேம் என்றால் பழய நிகழ்வுகளை மீண்டும் காட்டுவாரகள் அல்லாவது பத்துக்கட்டளைகள் போன்ற திரைப்படங்களால் தொலைக்காட்சியை நிரப்புவார்கள் .
கவிஞர் T S எலியட் ஏப்பிரல் கொடுமையானது (April is the cruellest month) என்ற அவரது கவிதையை நான் திருப்பிப்போட்டு அக்காலத்தில் மார்கழி கொடுமையானது எனப்படிப்பேன் .
நன்றி அம்ருதா
மறுமொழியொன்றை இடுங்கள்