Month: மார்ச் 2020
-
நேபாளத்தில் வினோதமான சடங்குகள்.
நேபாளம் என்ற பெயர் வந்து 250 ஆண்டுகளே. இந்தியாவைப்போல் பல சிறிய அரசுகள் இருந்த பிரதேசம் . கூர்க்கா பிரதேசம் என்ற நேபாளத்தின் வடபிரதேசத்தை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவி நாராயணன் ஷா தனது ஆட்சியில் முழுப்பிரதேசத்தையும் ஒன்றிணைத்து நேபாளத்தை இந்து நாடாக பிரகடனப்படுத்தினான். – அக்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவை ஆண்டார்கள். இதன் பின்பு முழு நேபாளம் கூர்க்கா நாடக சொல்லப்படுகிறது . இந்திய ராஜபுத்திர வம்சத்தில் வந்த பிருதிவி நாராயணனது வம்சமே பிற்காலத்தில் தொடர்ந்து நேபாள […]
-
பாக்மதி ஆறும் பசுபதிநாத் ஆலயமும்.
நடேசன் பாக்மதி ஆறு காட்மாண்டில் இருந்து கங்கைக்கு வந்து சேருகிறது. நேபாள நாகரீகம் இந்த நதிக் கரையிலே தொடங்குகிறதென்கிறார்கள். இதன் ஒரு கரையில் கங்கை ஆற்றில் இடம் பெறுவது போன்று இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வந்து எரிக்கப்படுகின்றன. மறுகரையில் எப்பொழுது இறப்பு வரும் என ஜோதிடம் சொல்பவர்கள் நிறைந்துள்ளார்கள். ஆற்றம் கரையிலிருந்து பொசுங்கும் மனித உடலில் இருந்து வரும் மணமும் புகையும் என் மனைவியை அங்கிருந்து விரட்டியது . எனக்கு அருவருப்பை ஏற்படுத்திய போதும், வாழ்வின் நிரந்தரமற்ற […]
-
அஜித் போயகொட எழுதிய “” நீண்ட காத்திருப்பு
”படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி “ சிறை – நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு சிறையினுள்தான் எப்பொழுதும் வாழ்ந்தபடி உள்ளோம். என்று நாம் சிறிய அளவுகொண்ட இடப்பரப்பினுள் அடைபடுகின்றோமோ அன்றுதான் சிறையை உணர்கிறோம். கொமடோர் போயாகொடவின் A Long Watch பிரதியின் வாசிப்பனுபவமும் இவ்வாறானதாகத்தான் அமையப்போகின்றது. “ சமகாலத்தில், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், நமக்கு நாமே உத்தரவிட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டுள்ள இவ்வேளையில் இந்த நூலையும் வாசித்து அதன் அனுபவத்தை எழுத நேர்ந்துள்ளமையும் எதிர்பாராததுதான்.இந்த நூலின் பதிப்புரையின் தொடக்க வரிகளை […]
-
நேபாளம் – பயணக் குறிப்புகள்.- 2 (Patan Durbar Square)
பார்டன் நகரம் காட்மாண்டு பள்ளத்தாக்கில் மூன்று அரசுகள் இருந்தன அவற்றில் ஒன்று இருந்த இடம் பார்டன் என்னும் நகரம். இதுவே நேபாளத்தில் பழமையான நகரம்.நாங்கள் இருந்த இடத்திலிருந்து காட்மாண்டு போக்குவரத்து நெருசலுடாக ஒரு மணி நேரப் பிரயாணமாக இருந்தது. அத்துடன் சிற்ப சித்திர மற்றும் கட்டிடக் கலைஞர்கள் இருப்பதால் அந்த இடத்தை லலிதப்பூர் என்கிறார்கள். இங்கு உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டாலும் 6ம் நூற்றாண்டில் இருந்து வணக்கத்தலங்கள் கோவில்கள் எல்லாம் தொடர்ச்சியாக வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. […]
-
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்.
நடேசன் சென்னையில் எழுத்தாளர் மாலனைச் சந்தித்தபோது அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற சைரஸ் மிஸ்திரியின் நாவலை எனக்குத் தந்தார். அந்த நாவலை வாசித்த பின்பு எனக்கு குஜராத்தின் காந்தி நகரில் நடந்த சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தேன் . இரண்டு கிழமைகள் இடைவெளியில் நான் அங்கு சந்தித்த இருவரால் ஒரு விடயம் என் கவனத்தில் வந்தது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தன்னார்வமாக இயங்கும் பாரதிதாசன் எந்த அறிமுகமும் அற்றவர் . சந்தித்த இடத்தில் […]
-
நேபாளம் – பயணக்குறிப்புகள்
நடேசன் நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது. அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் […]
-
7 கோழிகூவும்பருவம்
கரையில் மோதும் நினைவலைகள் 7 நடேசன் எனது அப்பு (தந்தை ) 1969 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சனிக்கிழமை காலை நேரத்தில், ஊரில் இருந்து எனக்காகக் கொண்டு வந்த மதிய உணவை எனது படுக்கைக்கு அருகில் உள்ள சிறிய அலுமாரியைத் திறந்து வைத்துவிட்டு , வேகமாக அதன் கதவை அடித்து மூடினார். பின்னர் , என் பக்கம் திரும்பிப்பார்த்தார். அவரது முகம் மாறியிருந்ததை கவனித்தேன். ஏதும் கோபமோ அல்லது ஏமாற்றமோ எனச் சரியாகத் தெரியவில்லை. எனது […]
-
6 B கரையில் மோதும் நினைவலைகள்
சிட்னியின் மேற்குப் பல்கலைக்கழகம் –தொழிலாளர் நிலையில் இருந்து விஞ்ஞான ஆய்வாளன் என தொழில் கிடைத்தபோது ஆரம்பத்தில் ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்டது . எந்த ஒரு வழிமுறையும் இல்லாது , என்னிடம் பொதுமக்கள் நலம் சம்பந்தமான ஒரு புறொயெக்ட் தரப்பட்டது . சிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி போசாக்குள்ளது. […]