Monthly Archives: ஒக்ரோபர் 2019

யாழ்ப்பாணத்திற்கு விமானசேவை

நடேசன் பலாலிக்கு இந்திய விமானம் வந்திறங்கியது என்ற செய்தி பல காலமாக மனதின் ஆழத்திலிருந்த பாடசாலை நினைவுகளை கிளறிவிட்டது. பல விடயங்களைப் போர் உண்டு ஏப்பம் விட்டுவிட்டது. புதிதாக ஒரு தலைமுறை எதையும் தெரியாது குண்டுகளின் ஓசையிலும் , வெடிகளின் மணத்திலும், போரின் காயங்களையும் சுமந்தபடி வாழ்கிறது. ஆனால், நாங்கள் போர் தீண்டாத காலங்களை ருசித்தவர்கள் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி

இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி கிழக்கிலங்கையில் பறிபோகும் தமிழ்ப்பெயர்கள் முருகபூபதி ” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்

ஹொஸ்டனில் ஏறிய விமானம் இருபதினாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில்லாத விமானப்பயணம். கையில் இருந்த புத்தகத்தை வாசித்தவாறே, விமானப்பயணத்தின் பாதையை தொலைக்காட்சித் திரையில் இடைக்கிடையே பார்த்துக்கொண்டிருந்தேன். தரை இறங்குவதாக விமானத்திலிருந்து அறிவிப்பு வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன் . இறுதியில் தரையில் தட்டி, விமானம் நின்றது. அமெரிக்கர்கள் மட்டும் கைதட்டினார்கள் . அப்போது மீண்டும் தொலைக்காட்சி … Continue reading

Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கூனன் தோப்பு -குடியேற்றம்

வாசிப்பு அனுபவம் நடேசன் கடற்கரை அருகே ஒரு ஆற்றின் இரு பக்கத்திலும் காலம் காலமாக அமைதியாக வாழும் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே நடந்த கலவரங்களையும் அதன் விளைவாக அழியும் அப்பாவி மக்களின் அவலங்களையும் பேசும் கதையிது . இதைப் படித்தபோது இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் என் மனதில் வந்து போனது. கொழும்பான் சேமது … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அஞ்சுவண்ணம் தெரு-தோப்பில் முகமது மீரான்

நடேசன் தோமஸ் காடியின் நாவலான த மேயர் ஒவ் காஸ்ரபிரிஜ் ( Thomas Hardy – mayor Of Casterbridge) உலக நாவல்களின் வரிசையில் அதனது ஆரம்ப அத்தியாயத்திற்காக விதந்து பேசப்படும் ஆங்கில நாவல். அந்த நாவலின் முதலாவது அத்தியாயம் மனைவியை ஐந்து பவுனுக்காக சந்தையில் ஏலம் விட்டு ஒரு கடலோடிக்கு விற்கும் சம்பவத்தை சித்திரிக்கிறது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

குயவன் வனையும் கோடுகள்

நூல் அறிமுகம் – எஸ்.அர்ஷியா 2009 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் இலக்கிய உலகம் எண்ணற்ற படைப்புகளின் வழியே மேலும் மேலும் வளமையும் செழுமையும் அடைந்து வருகின்றது. புவிமையத்தின் 360 கோணங்களிலிருந்தும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. காலத்தாலும் சூழலாலும் இலங்கையிலிருந்து விசிறியடிக்கப்பட்ட புலம் பெயர்த்தவர்களின் எழுத்துகள் வலி நிறைந்த கவிதைகளாக, பல்தரவுகள் கொண்ட கட்டுரைகளாக, துன்ப … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அசோகனினின் வைத்தியசாலை. பதிவுகள் இணையத்திற்கு எழுதிய அறிமுகம்

கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக