எழுத்தாளர் நடேசன் (கானல் தேசம்) மீது
முகநூலில் முன்வைக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டதுமான
விமர்சனங்களே கானல் தேசம் மீது எனக்கும் எதிர்பார்ப்பை கூட்டியது.
ஆசிரியர் தனது முன்னுரையில் ஒப்புவிப்பதைப் போலவே,
ஓர் அறிதல் / கேள்விப் புனைவாக கானல்தேசத்தை படைத்திருக்கிறார்.
நியூட்டனின் 3ம் விதியைப் போலவே;
ஈழம் மீது தாக்கம் செலுத்திய விடுதலை என்கிற வினை,
கொண்டிருந்த நேர் வினைகளை
தீபச்செல்வன், தமிழ்நதி, குணாகவியழகன் (இன்னும் பலர்) சமகாலத்தில் இலக்கியப்புனைவுகளாக்கி தந்திருக்கிறார்கள்.
அதைப் போல, அதன் எதிர்வினைகளை
சோபா சக்தி (இன்னும் சிலர்) பல புனைவுகளாக்கி தந்திருக்கிறார்கள். இந்த வரிசையில்தான் நடேசனின் கானல் தேசமும் இணைகிறது.
வெறுமனே ஒற்றைப் பக்கம் நின்று கொண்டு,
ஒரு சாராரின் நன்மதிப்பை பெறும் நோக்கை விட்டு விலகி, விமர்சனங்கள் வருமென்று தெரிந்தும்,
ஒரு புனைவினூடாக பொதுவான பார்வையைச் செலுதியிருக்கிறது கானல் தேசம்.
கானல் தேசம் முன்வைக்கும் வாதப் பிரதிவாதங்கள் எவ்வளவு உண்மை/ நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதற்கப்பால்,
இரு சமூகங்களிலும் எவ்வாறான மனநிலை ஓடியிருக்கும் என்கிற தர்க்கவியலை
வாசகனுக்குள் விதைத்து வெற்றி கண்டிருக்கிறது கானல் தேசம்..
விடுதலை என்கிற சொல்லை வைத்து
பணமுதலைகள் ஆனவர்களையும்,
பகட்டு வாழ்வுக்காக
பதறி ஓடிப்போனவர்கள் சிலரையும்
புனைவினூடாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது கானல் தேசம்..
(இப்பிடியான நூலுக்கு விமர்சனம் வராமல் போகுமா?? 😊)
உங்கள் தைரியத்துக்கு என் வாழ்த்துகள் அய்யா Noel Nadesan
மறுமொழியொன்றை இடுங்கள்