சலனங்களுக்கு வயதில்லை “
“இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.
பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் இவரைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர்.”
மேற்படி கூற்று இவர் பற்றிய ஒரு இணைய சஞ்சிகை நேர்காணலின் குறிப்பாக வந்தது.
இவரது படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை.
“நோயல் நடேசன்.”
******************
என்.எஸ். நடேசன். எழுவைதீவைச் சேர்ந்தவர்.
யாழ். இந்துக்கல்லூரி மாணவர்.
கால்நடை மருத்துவர்.
மக்கள்விரோத நடவடிக்கைககளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விமர்சனத்தையும் கொண்டிருந்த நடேசன் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலைக்கு அப்பாலான இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.
புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் நடேசனின் ஊடக, இலக்கியச் செயற்பாடுகள் இதுவரையிலும் புலம்பெயர் சூழலிலேயே நடந்தன.
அவுஸ்ரேலியாவில் 15 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டார். கூடவே ‘வாழும் சுவடுகள்’ என்ற இரண்டு புத்தகங்களையும் ‘வண்ணாத்திகுளம்’ என்ற நாவலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
‘வண்ணாத்திகுளம்’ ஆங்கில மொழியில் வெளியாகி, அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் ‘தெற்காசிய இலக்கியம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் போரின் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணிகளை ‘வானவில்’ என்ற அமைப்பின் ஊடாகச் செய்து வருகிறார் நடேசன். இந்தப் பணியில் அவர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பிற நண்பர்களையும் இணைத்துள்ளார்.
இவரது நூல்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
$ இவரது நூல்கள்:
நாவல்கள்:
* வண்ணாத்திக்குளம்.( -2003.2011. இருபதிப்புகள்)
*உன்னையே மையல் கொண்டு. ( 2007.)
* அசோகனின் வைத்திசாலை.(2014.)
* கானல் தேசம். ( – 2018)
கட்டுரைத் தொகுப்பு:
*வாழும் சுவடுகள்.
*வாழும் சுவடுகள் -2 (-2015)
சிறுகதை தொகுப்பு:
* மலேசியன் ஏர்லைன்ஸ்.370.
சுயஅனுபவ வெளிப்பாடு.:
*எக்ஸைல்.
” சலனங்களுக்கு வயதில்லை ”
********************************
இக்கதை சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின்
புலம்பெயர்வு பற்றிய சிறுகதைத் தொகுதி.
2011.” முகங்கள் ” ல் இடம்பெற்றது.
ஜெனிவா சென்ற சமயம் அல்ப்ஸ் மலை பிரயாணத்தில் ஒரு வயதான பொறியியலாளர் சந்தித்த அனுபவங்கள்.
******
காலை எட்டுமணியளவில்…
என ஆரம்பித்து.
அல்ப்ஸ் மலையின் உச்சியில் பார்த்த
பனிப்புகாரைப்போல் மெதுவாக விலகியது.
https://noelnadesan.com/2011/04/28/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%af/
என்று முடியும் இக்கதையை மேற்படி நூலில்
வாசிக்க முடியும்.
இவருக்கும் எனக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம்…ஜெயமோகனை எனக்குப் பிடிக்காது.
மறுமொழியொன்றை இடுங்கள்