கானல் தேசம்: பழையகள், பழையமொந்தை ஆனால் தவிர்க்க முடியாதது.


ஹஸீன்

நிறைய வேலைகளுக்கிடையில் இந்த நாவலை நான் வாசித்தேன்.

இந்த கால கட்ட மனிதர்களுக்கு இன்னும் நாவல் வாசிக்க நேரம் இருக்கிறதா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்கும் மீன்டும் எழுந்தது.

போழுது போக்குக்காக நாவல் வாசிபபவர்கள் நிச்சயமாக குறைந்துதான் இருக்க வேண்டும்.நாவலை விடபோழுது போக்க கூடிய சாதனைங்கள் எப்போதும் கையில் இருக்கும் படியான காலத்தில் இருக்கிறோம்.

இப்போது நாவல் படிப்பது தேவை நிமிர்த்தமாக இருக்கிறது.

அந்த தேவைகளில் முக்கியமான ஒன்று புரிந்து கொள்ளல் எனும் அடிப்படையில் வந்தது.

புரிந்து கொள்ளல் என்பது சுருக்கமானதாக இல்லை.

கணிப்பீடுகளே சுருக்கமானதாக இருக்கிறது.

இந்த கணிப்பீடுகள் உருவாக்கிய சிக்கல்களை அவிழ்க்க விரிவாக உரையாட வேண்டி உள்ளது.

விரிவாக உரையாடுவதால் புரிந்துணர்வு வரலாம்.அதற்கு நாவல் எனும் கலை வடிவம் ஏதுவாக இருக்கிறது

நான் தஸ்தோவஸ்கியின் நாவல்களை நாவல்கலையின் உச்சம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நூற்றாண்டுகள் ஆகியும் அந்த நாவல்களின் சிந்தனையிலும் தளத்திலும் விரித்த தளங்களை இன்னும் தாண்ட முடியாமல் இருக்கிது.அவனது சிந்தனையின் பின்னால் ஓடி மூச்சிரைத்து நிற்கிறேன்.அவன் தனிமனிதன் அல்ல ஒரு சமூகத்தின் சிந்தனை வெளிப்பட்ட மூலம் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.

கஃப்காவும் அப்படித்தான்.

தற்காலத்தில் ஓரான் பாமூக்கும் சீமந்தா எங்கோசி அடிச்சியும் அப்படித்தான்.

நாம் நம் எழுத்தாளனை எங்கு வைத்து பார்ப்பது சர்வேதேச எழுத்தாளனுடனா அல்லது நம் உள்ளுர் வீரர்கள் இங்கு ஓடி வென்றால் போதும் என்றா?

ஆனால் நம் பிரச்சினைகளை நாம் சர்வேதச பிரச்சினையாகவே கருதுகிறோம்.அந்த தளத்தில்தான் நடேசனின் கானல் தேசம் எழுதவும் பட்டிருக்கிறது.சர்வே தேச நாவல்களோடுதான் அதன் தரத்தையும் பார்க்க வேண்டி உள்ளது.அப்படி பார்ப்தற்கான அளவுகோல்கள் உள்ளதா?

எனக்கு கானல் தேசம் நாவல் ஏன் பிடித்து போனது என்றால் அதன் களம்.நாற்பது ஆண்டுகால நம் வாழ்வை அதன் சீரழிவான போக்கினை எந்த தயக்கமும் இன்றி முன் வைக்கிறார்.நடேசன் மொழியில் அல்லது கதாபாத்திரத்தில் எந்த ஆவேசமும் இல்லாமல் வைக்கிறார்.ஒரு மனம் கொந்தளிப்பு இல்லாமல் நானுறு பக்க நாவலை எழுத முடியுமா?இந்த வாழ்க்கையின் சித்திரங்களை கோர்க்க முடியுமா?அந்த சித்திரங்கள் சாதாரணமானதா?இலங்கையர்களுக்கு தமிழர்களுக்கு பழகியதாக இருக்கலாம் இந்த உலகில் எல்லோர்க்கும் அப்படியா?

நடேசனுக்கு இந்த போர்க்கால வாழ்வின் எல்லா தளங்களையும் நின்று நிதானமாக பார்க்க மனம் வாய்த்திருக்கிறது.அதன் பிரகாரமே பாத்திரங்கள் வார்க்கப்பட்டிருக்கிறது.அவர்களை எங்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தெளிவுடனேயே கதை நகர்த்தப்படுகிது.இப்படி அறம் அற்ற போக்கு இத்தால் வரும் சீரழிவைத்தான் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது.

போரின் சர்வதேச தளம் எவ்வளவு இலகுவாக தரை தட்டும் என்பதற்கான பாத்திரங்களே ஜெனியும் அசோகனும்.

கம்யூனிஸ்டுகளை எப்படி தமிழ் தேசிய வாதம் படுக்கையில் வீழ்த்தியது என்பதற்கு மாமா ஒரு எடுத்துக்காட்டு.கார்த்திகா நான் கடந்த காலங்களில் ஆவணப்படங்களுக்காக சந்தித்தபெண்களின் முகம். போருக்கு விரும்பி சென்ற முன்னாள் பெண் போராளிகளின் முகம்.அதே நேரம் அவர்கள் கார்த்திகாவை போல இவ்வளவு பாதுகாப்பான வாழ்வுக்குள் இல்லை.சமுகத்தில் சக்கையாக வீசி எறியப்பட்டிருக்கிறார்கள்.அவர்களாக இப்போதுதான் மாற்று திறனாளியாக நடமாட ஆரம்பித்திருக்கிறார்கள்

செல்விதான் இந்த மொத்த வாழ்வின் குரூர சிந்தனையின் வானுயுர்ந்த படியின் கடைசி படிக்கட்டு.இந்த சமூகம் எதை சிந்தித்ததோ அதன் அறு வடை.அந்த பக்கம்களை படிக்கும் போது உங்களுக்கு பித்து பிடிக்காமல் இருக்க இறைவன் வலிய மனதை உங்களுக்கு தர வேண்டும்.

நியாஸ் செய்த பாவம்தான் என்ன?

அவனை சித்திரவதை செய்த இரவு மழையை யாரால் மறக்க முடியும்.பொது வாக ஈழத்தில் இருந்து வரும் நாவல்களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு.அவர்கள் வெளியேற்றபட்டதை மறைக்க முயல்வார்கள் அப்படி அல்லாமல் நியாஸ் ஊடாக அவன் குடும்பமும் அந்த இன சுத்திகரிப்பும் ஆழமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் விடுபட்ட முக்கியமான காலம்மொன்று இருக்கின்றது. போர் துவங்க காரணமான காலமது அதனை அனுபவமாக வாழ்ந்த நோயல் நடேசனிடம் எதிர்பார்க்கத்தான வேண்டும்.

நன்றி மறுத்தோடி இணைய இதழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: