Monthly Archives: பிப்ரவரி 2019

‘புலிகளின் அழிவுக்குக் காரணம் தேடிய பிரேத பரிசோதனை’

டாக்டர் நடேசனின் நாவலான ‘கானல் தேசம்’ பற்றிய சிறு விமர்சனம். ( 1) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-லண்டன் ‘கானல் தேசம்’ என்ற நாவல் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற, பல பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுடன் ஆயுதம் தாங்கிய அற்புத அவதாரமாய்’ வளர்ந்த விடுதலைப் போராளிகளின் போராட்டம் என்னவென்று சட்டென்று அழிந்து சாம்பலானது என்பதை,ஒரு மருத்துவர் பல காயங்களுடன் இறந்துவிட்டவனின் உடலின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

முகவுரை மட்டும் வைத்து ஒரு மணிநேரம் பேசமுடிகிறதே!

சும்மா சொல்லக்கூடாது நம்மால முடியாத விடயம். சாகித்திய அக்கடமி பரிசு பெயற்ற நாவல்களுக்கே கிடைக்காத வாய்ப்பு. இதைப்பற்றி நான் யோசித்திருந்தால் நாய் பூனைக் கதைகளை எழுதாமல் பலவருடங்கள் முன்பாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அறிமுகம் கானல் தேசம்

சுகு-ஸ்ரீதரன் கானல் தேசம் தமிழ் சமூகத்தில் பேசப்படுவதை விரும்பாத பிரச்சனைகளை கலை இலக்கிய வடிவத்திற்கு கொண்டு வருகிறது. பேசாப் பொருளைபேசத்துணிந்தது. தமிழ்போராட்டத்தின் அறஞ்சார் தராதரத்தை அது அலங்காரம் எதும் இல்லாமல் தனது இயல்பான ஓட்டத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. போராட்டத்தின் பிரதான போக்கில் பொதிந்திருந்த சர்வதேச அளவிலான “மாபியாதனத்தை” மக்களின் பேரில் சேகரிக்கப்பட்ட உலகளாவிய நிதி எவ்வாறு துஸ்பிரயோகம் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நடேசனின் எக்சைல்

சுகு-ஸ்ரீதரன் திருநிலை- புனிதப்படுத்தப்பட்டவை மீதான தீவிரமான கேள்விகள் நடேசனின் எக்சைல் மற்றும் கானல் தேசம் இரண்டு நூல்களும் சமகால கவனத்திற்குரியன. படைப்பு சுதந்திரம் ஒரு சமூகத்தின் சுயவிசாரணை தொடர்பாக அவை முக்கியத்தும் வாய்ந்தன. எக்ஸைல் “முறிந்த பனை” 1990 களின் முற்பகுதியில் பரவலாக பேசப்பட்டது. அக்காலத்தில் அது தமிழ் “புனிதங்களை” பற்றி கேள்வி எழுப்பியதால் பூசிப்பவர்களின் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அறச்சீற்றமா? ஆற்றாமையா?

ஜெயமோகனுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் முக்கியமாக கவிஞர்களின் அறச்சீற்றம் ஆழிப் பேரலையென பொங்கியெழுந்ததைக் கண்டு பயந்து போய்விட்டேன் . 2004 மார்கழியை நினைவு படுத்தியது. ஐரோப்பாவில் இருந்து பெருந்தலை எனது பெயரையும் இழுத்து விட்டது. இது அடுக்குமா? ஒருவரின் நண்பனாக இருப்பது குற்றமா ? வேறொருவர் அல்லக்கை என ஒரு நக்கல். ஜெயமோகனது நண்பனாக இருப்பது மட்டும் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன்

மதிப்புரை ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

கானல்தேசம்- முன்னுரை

அப்பிள் நிலத்தில் விழுவது, அதனது காம்பு சூரியவெப்பத்தில் காய்ந்துவிடுவதாலா? காற்று பலமாக வீசியதாலா? புவியீர்ப்பினாலா? அல்லது அப்பிள் மரத்தின் கீழே நின்ற சிறுவன் அதை உண்பதற்கு விரும்பியதாலா? இப்படி பல காரணங்கள் பழமொன்று விழுவதற்கு இருக்கும்போது, ஏனைய விடயங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கலாம் என ருஷ்ஷிய எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோய் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதை வாசித்தபோது … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ”

கருணாகரன்— “வரலாற்றில் பிழையான இடத்தில் நின்று விடுவேனோ” என்ற எண்ணமே பலரையும் அரசியல் குறித்துச் சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க மட்டுமல்ல, அரசியலில் செயற்படவும் வைக்கிறது. அது நேரடியான பங்கேற்பாகவும் இருக்கலாம். சற்று இடைவெளி கொண்ட ஆதரவாகவும் இருக்கலாம். அதுவும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் நிகழ்கின்ற காலத்தில் அல்லது இன ரீதியான அரசியல் விவகாரம் என்று … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

மகேந்திரன் திருவரங்கன் இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகி விடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அசோகனின் வைத்தியசாலை

டாக்டர் எம்.கே.முருகானந்தன் இந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக