Monthly Archives: திசெம்பர் 2018

மெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள்

வாசகர் முற்றம் – அங்கம் – 02 “தாய்மொழி கன்னடம், தமிழ்மொழியில் தீராத காதல்” முருகபூபதி கன்னட இலக்கியம் அறிமுகம் பழங்காலம் (600 – 1200) கன்னட இலக்கியத்தின் முதல் பெரும் படைப்பாக 9 ஆம் நூற்றாண்டில் எழுந்த கவிராச மார்க்கம் கருதப்படுகிறது. இந்த நூல் கவிதையியல் பற்றியது. 10 ஆம் நூற்றாண்டில் வட்டாராதனே என்னும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

டான்” தொலைக்காட்சி குகநாதன்

நீரில் வாழும் மீன்போல் 40 வருடங்கள் ஊடகத்துறையில் தனது சுவாசக்காற்றை எடுத்து வாழும் “டான்” தொலைக்காட்சி குகநாதனை 2009 மார்ச் மாதத்தில் சந்தித்த பின்பு ஒரு சகோதரனாக எனக்கு நெருக்கமானவர். இலங்கை சென்றால் அவருடன் தங்குவது, ஐரோப்பா சென்றால் அவரது குடும்பத்தினருடன் தங்கியது மற்றும் நல்லது கெட்டது எனப் பல விடயங்களில் பங்கு பற்றியபோது எனக்குத் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்

” நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ” தொடருக்கு களம் தந்தவர் முருகபூபதி ” யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையில் தனது தம்பி குகநாதன் பணியாற்றுகிறார் ” என்று கொழும்பில் என்னைச்சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான காவலூர் ஜெகநாதன் ஒரு நாள் சொன்னார். அப்பொழுது 1978 ஆம் ஆண்டு. தமது 19 வயதில் யாழ்.ஈழநாடுவில் இணைந்த குகநாதனை 1984 இல்தான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மீகொங் நதிக்கரையில் மார்கரிட்டா டுராஸ் – த லவர்ஸ்(The Lovers)

மீகொங் நதிவழியே மிதக்கும் சந்தையை பார்த்து விட்டு , நாம் பயணித்த எமது படகு தொடர்ந்து போனபோது , நாங்கள் இறங்கிய சிறியநகரம் ( Cai be). அங்கு அவல் செய்வது , அரிசியில் சாராயம் வடிப்பது போன்ற பல சிறு கைத்தொழில்களைச் செய்யும் மக்களைப்பார்க்க முடிந்தது. நதிக்கரையில் இவற்றைத் தயாரிப்பதனால், இவர்களால் பொருட்களை எளிதாகச் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா!

அன்றும் இன்றும் – அங்கம் 01 டீ.பி.-தென்னக்கோன் கலாநிதி-விஜயானந்த-தகநாயக்கா ரஸஞானி உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால், வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான பரிணாம வளர்ச்சியும், இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது. சமூகத்தில், மதங்களில், நோய் உபாதைகளில், வெகுஜன … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

படித்தோம் சொல்கின்றோம்:

ஆழியாள் மொழிபெயர்த்த அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள் பூவுலகைக்கற்றலும் கேட்டலும் முருகபூபதி பூமித்தாயை கற்கவும் அவளது உணர்வுகளை கேட்கவும் முடியுமா? ஆம்! முடியும் என்பவர்கள்தான் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான அபோர்ஜனிஸ் இனத்தவர்கள். இயற்கையை நேசித்து அதற்கியைந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரிடமிருந்து, வந்தேறு குடிகளால் அபகரிக்கப்பட்ட பெருநிலப்பரப்பிலிருந்து குரல்கள் தொடர்ந்தும் ஒலிக்கின்றன. அங்கு இசையும் அவலமும் கண்ணீரும் இழப்பும் பண்பாட்டுக்கோலங்களும் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எறிகணைத்துண்டுகளை தாங்கி நிற்கும் மரங்கள்

கருணாகரன் “கஜா புயல்” மிரட்டியதால் எங்கள் வீட்டில் முப்பது வருசமாக நின்று பழம் பழமாகப் பழுத்துக் கொட்டிய பலா மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. துக்கமwar-tree்தான். ஆனால் வேறு வழியில்லை. கிளைகள் வளர்ந்து வானமுகட்டைத் தொடுமளவுக்கு உயர்ந்து விட்டன. ஏதேனும் ஒரு கிளை ஒடிந்தாலும் கூரையில் பாதி போய் விடும். ஏற்கனவே ஒவ்வொரு பழச் சீசனிலும் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

மனாமியங்கள் – சல்மா

சாந்தி சிவகுமார் மெல்பேர்ன் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாவில், இந்த நாவலை மெல்பேர்ன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்க்காக எந்தவிதமான முன்னுமானமுமின்றி நாவலை வாசிக்க தொடங்கினேன். ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் ”புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து”. எனக்கு அறிமுகமில்லாத புது வெளியை, புது வாழ்க்கையை என் முன் நிறுத்தியது. இயல்பான் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மாவீரர்நாள் வியாபாரம்

நடேசன் ஓ……. மரணித்த வீரனே…… உன் சீருடைகளை எனக்குத் தா…… உன் பாதணிகளை எனக்குத் தா… உன் ஆயுதங்களை எனக்குத்தா…. என்றவர் முடிவில் பிள்ளைகளுக்கும் சேர்த்து கொத்துரொட்டி வாங்கிக் கொண்டு வீடு ஏகினார்! நன்றி: ஜோர்ச் குருசேவ் ரொபின் ஐலன்ட் சிறையை சில வருடங்கள் முன்பு சென்று பார்த்தபோது நெல்சன் மண்டேலா ரொபின் ஐலன்ட் சிறையில் … Continue reading

Posted in Uncategorized | 2 பின்னூட்டங்கள்

வுதெரிங் கைட்-Emily Bronte- 200 வருடங்கள்

இன்னமும் எமது மொழியில் தனித்துவமான ஒரு நாவலாசிரியையைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆங்கிலத்தில் காலமெல்லாம் நிலைக்கக்கூடிய ஒரே ஓரு நாவலை மட்டும் தனது நோய் படுக்கையில் இருந்து எழுதிவிட்டு சென்ற இளம் பெண்ணான எமிலி புரண்டியை அவர் பிறந்த 200 வருடத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன் எமிலி புரண்டியின் 22 வயதில் எழுதப்பட்டு வுதெரிங் … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக