Monthly Archives: ஒக்ரோபர் 2018

தென்னிந்திய நினைவுகள் 3; இலங்கை – இந்திய தமிழரை இணைக்கும் சங்கிலி

இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

அஞ்சலிக்குறிப்பு:கெக்கிராவ ஸஹானா

ஒரு தேவதைக் கனவை இலக்கியத்தில் பதிவுசெய்து, அற்பாயுளில் மறைந்த இலக்கியத்தேவதை கெக்கிராவ ஸஹானா மல்லிகை ஜீவா, ஜெயகாந்தனின் ஆசிபெற்று வளர்ந்த இலக்கிய ஆளுமை முருகபூபதி ” திருமதி ஸஹானாவின் ஒரு தேவதையின் கனவு சிறுகதைத்தொகுதி வெளிவருவது குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். தெளிவுற அறிந்திடவும், தெளிவுபெற மொழிந்திடவும், சிந்திப்போர்க்கு அறிவுவளர, உள்ளத்தே ஆனந்தக்கனவு பல காட்டலும் கைவரப்பெற்றவர்கள் … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

மகாத்மா காந்தியின் பேத்தியுடன் சந்திப்பு

நோயல் நடேசன் மகாத்மா காந்தியின் பேத்தியென்றபோது காந்தியை நினைப்பது தவிர்க்க முடியாது. ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தில் பலகாலம் முன்பாக படித்தது: எப்பொழுதும் எனக்கு நினைவில் இருப்பது: இந்தியாவின் பிரிவினை காலத்தில் இந்திய வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன், காந்தியைச் சந்தித்து “என்னிடம் அரை இலட்சம் இந்தியப்படைகள், ஐம்பதினாயிரம் பிரித்தானிய துருப்புகள் உள்ளார்கள். பஞ்சாப் பிரியும்போது … Continue reading

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

தென்னிந்திய நினைவுகள் 2; யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி

அடுத்த நாள் மாலையில்தான் சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்ய முடியும் என்பதால் இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். பத்து ரூபாய்க்கு ஒரு ஹோட்டல் அறை அந்த இரவு தங்குவதற்கு கிடைத்தது மிகவும் ஆச்சரியமானது. இலங்கையில் சாமானியர்கள் தங்குவதற்கு வசதியான இது போன்ற ஹோட்டல்கள் இல்லை. எங்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கும் வசதியுள்ள ஹோட்டல்கள் இருந்ததாகத் தெரியாது. … Continue reading

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக