மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி


ரஸஞானி
மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார்.

இவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும் செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள்.
இவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.
மத்திய கல்லூரியின் கிரிக்கட் அணியின் தலைவராகவும் பல கிரிக்கட் போட்டிகளில் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர். அன்று கிரிக்கட் மட்டையும் பந்தும் இருந்த இவரது கரத்தில் தற்பொழுது இருப்பது ஓவியம் வரையும் தூரிகைதான்.
இளமையில் படிக்கின்ற பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் காண்பித்து வந்திருப்பவர். துடுப்பாட்டத்திலும் விளையாட்டிலும், ஓவியக்கலையிலும் ஈடுபாடு காண்பித்தவரை, இவரது பெற்றோர்கள் மேற்கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பொறியியல் பட்டதாரியான நஸீர், தான் தவமாக கருதிய ஓவியக்கலையை கைவிடாமல் அதன் நுட்பங்களை வெளிப்படுத்திவந்திருப்பவர்.

மத்திய கிழக்கில் தொழில் நிமித்தம் பணிக்காக சென்றவர், அங்கும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு ஓவியங்கள் வரைந்து வழங்கியிருப்பவர். உள்ளார்ந்த கலையாற்றல் மிக்கவர்கள் எங்கு வாழநேரிட்டாலும் தாம் நேசித்த கலைத்துறையை கைவிடமாட்டார்கள் என்பதற்கு எம்மத்தியில் மெல்பனில் வதியும் ஓவியர் நஸீர் அவர்களும் ஒரு முன்னுதாரணம்.
1996 ஆம் ஆண்டு இவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இங்கு கிரிக்கட் அணிகளில் அங்கம் வகித்து பல கிரிக்கட் ஆட்டங்களில் பங்கேற்றிருப்பவர். அத்துடன் தொடர்ந்தும் தான் விரும்பும் ஓவியத்துறையிலும் ஈடுபட்டவர்.
மெல்பனில் வேவர்லி கலைக்கல்லூரியிலும் இணைந்து ஓவியத்துறையில் மேலும் தேர்ச்சி பெற்றார். அங்கு இடம்பெற்ற கண்காட்சிகளிலும் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றன. கடந்த மார்ச் மாதம் மவுண்ட் வேவர்லி கலாபவனத்தில் இவரது ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சமயம் அதனைக்கண்டு களித்த பலரதும் பாராட்டைப்பெற்றவர்.
குறிப்பாக அக்கண்காட்சியில் இடம்பெற்ற இவரது கைவண்ணத்தில் உருவான மெல்பன் பிரதான ரயில் நிலையமான Flinders street station ஐ சித்திரிக்கும் ஓவியம் கலா ரஸிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றது.

விக்ரோரியா மாநிலத்தில் தோன்பறி என்னுமிடத்தில் அமைந்த மியூசியத்திலும் ( Islamic Museum ) ஓவியர் நஸீரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இவரது மற்றும் ஒரு ஓவியக்கண்காட்சி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி (04-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
விழாவும் ஓவியக்கண்காட்சியும் நடைபெறும் முகவரி: Keysborough Secondary College மண்டபம் (28 Isaac Road, Keysborough, Vic 3173)

அனுமதி இலவசம். அன்பர்கள் அழைக்கப்படுகின்றனர். ஓவியர் நஸீரின் சில ஓவியங்களை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

—0—

“மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி” மீது ஒரு மறுமொழி

 1. Read
  Thanks

  ஞாயி., 14 அக்., 2018, பிற்பகல் 1:20 அன்று, Noelnadesan’s Blog எழுதியது:

  > noelnadesan posted: ” ரஸஞானி மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர்
  > அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர்
  > யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில் நகரபிதாவாக ( மேயர்) பதவியிலி”
  >

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: